சென்னையில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் எல்லாம் நேரடியாக சென்று உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

திரை நட்சத்திரங்களும் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட பல நடிகர்களும், ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பல நடிகைகளும் நடிகர் சங்கம் மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் 15 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இந்த பணத்தை கமல் தன்னுடைய மேனேஜர் மூலம் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெள்ள நிவாரணம்… ரூ 10 கோடி கொடுத்தாரா ரஜினி?
10-12-2015
09-1449661127-rajini-news-600சென்னை: தமிழக வெள்ள நிவாரண நிதியாக நடிகர் ரஜினிகாந்த் ரூ 10 கோடி கொடுத்ததாக ஊடகங்களிலும் முன்னணி பத்திரிகைகளிலும் செய்திகள் வலம் வந்தவண்ணம் உள்ளன.இந்த விஷயத்தில் உண்மை என்ன என்று விசாரித்ததில், ரஜினி ரூ 10 கோடி கொடுத்ததாகச் சொல்லப்படுவது சிலரால் பரப்பப்பட்ட வதந்தி என்று தெரியவந்தது.உண்மையில் வெள்ள நிவாரணத்துக்கு என்ன கொடுத்தார் ரஜினி? கடந்த டிசம்பர் 1-ம் தேதி வெள்ள நிவாரண நிதியாக ரூ 10 லட்சத்தை, சென்னையை பெரும் மழை தாக்கியதற்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தார் ரஜினி.

அதன் பிறகு வெள்ளம் தாக்கிய பிறகு, கடந்த ஐந்து தினங்களாக நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் அனுப்பி வைத்து வருகிறார்.

ராகவேந்திரா மண்டபத்திலும், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் அலுவலகத்திலும் வைத்து இந்த நிவாரணப் பொருள்கள் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுவரை 50க்கும் அதிகமான லோடு நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளார் ரஜினி என்று தெரியவந்துள்ளது. இதனை அவரது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா மேற்பார்வை செய்து வருகின்றனர்.

ரஜினியின் மருமகன் தனுஷும் இதில் பங்கேற்று வருகிறார். ரஜினி ரசிகர் மன்றத்தினருடன் தனுஷ் ரசிகர்களும் இணைந்து இந்த நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கடந்த ஐந்து தினங்களாக நூற்றுக்கணக்கான ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் பாய், போர்வைகள், புதிய உடைகள், பால் பவுடர், சமையல் பொருள்கள், தண்ணீர் பாட்டில்கள், மெழுகுவர்த்திகள், கொசு விரட்டிகள், வேட்டி, சேலைகள், அரிசி, நூடுல்ஸ், பருப்பு என 25 வகைப் பொருள்களை ராகவேந்திரா மண்டபத்திலிருந்தும், தனுஷ் அலுவலகத்திலிருந்தும் பெற்று விநியோகித்து வருகிறோம்.

சென்னை நகரம் முழுவதிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருள்களை விநியோகித்துவிட்டோம். இப்போது கடலூர், தூத்துக்குடி, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுவரை ரூ 5 கோடி மதிப்பிலான பொருள்களை நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகித்துள்ளோம். மேலும் 20 லோடு நிவாரணப் பொருள்கள் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களிலிருந்து வரவிருக்கின்றன,” என்றார். முதல்வரிடம் தனது மனைவி மூலம் மேலும் ரூ 10 கோடியை ரஜினி வழங்கியதாக வந்த செய்தி குறித்துக் கேட்டபோது, “உண்மை தெரியாமல் சிலரால் பரப்பப்பட்டு வரும் வதந்தி அது,” என்றார் அவர்.

Share.
Leave A Reply

Exit mobile version