மும்பை: தனது முன்னால் காதலி ஐஸ்வர்யாராயைத் தவிர்க்கும் பொருட்டு முகேஷ் – நீதா அம்பானி அளித்த பார்ட்டியில் நடிகர் சல்மான் கான் கலந்து கொள்ளவில்லையாம்.IndiaTv8fc8a4_salman_aishwaryaபாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான்கான் – ஐஸ்வர்யா ராய் காதல் நீண்ட வருடங்களுக்கு முன்பே முடிவுக்கு வந்து விட்டது. எனினும் இன்றும் ஐஸ்வர்யா ராய் தனது வாழ்வில் குறுக்கே வருவதை சல்மான் விரும்பவில்லை என்று பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

சல்மான்கான் – ஐஸ்வர்யா ராய்
சல்மான் கான் – ஐஸ்வர்யா ராய் இருவரும் திரைப்படங்களில் இணைந்து நடித்தபோது காதல் கொண்டனர். ஆனால் மிக விரைவில் இருவரின் காதலும் முடிவுக்கு வந்தது. இந்த காதல் முறிவிற்குப் பின்னர் சல்மான் கான் மிகவும் மோசமாக தன்னிடம் நடந்து கொண்டதாக ஐஸ்வர்யா ராய் பேட்டிகள் அளித்து வந்தார்.
அம்பானி பார்ட்டி
சமீபத்தில் முகேஷ் – நீதா அம்பானி தம்பதியர் தங்களது மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி வீரர்களான ரோகித் ஷர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோரின் திருமணத்தை ஒட்டி ஒரு மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி நடிக, நடிகையர் பலரும் கலந்து கொண்டனர்.
சல்மான் கான்
முன்னதாக இந்த விருந்தில் கலந்து கொள்ளவிருந்த சல்மான்கான், ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் கலந்து கொள்வதை அறிந்து தனது நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார். சல்மானுக்குப் பதிலாக அவரது சகோதரர் சோகைல் கான் இந்த விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
ஷூட்டிங்
இதே போல சுல்தான் படப்பிடிப்பை ரத்து செய்திருந்த சல்மான் திடீரென்று இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபரிடம் சொல்லி படப்பிடிப்பைத் தொடங்குமாறு கூறியிருக்கிறார். சல்மானின் இந்த நடவடிக்கை அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சிறிது நேரம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின்னர் தனது பண்ணை வீட்டிற்கு ஓய்வெடுக்க சல்மான் கான் சென்று விட்டாராம்.

15 வருடங்கள்
தற்போது இதனை கேள்விப்படுபவர்கள் ஐஸ்வர்யா ராயுடனான காதல் முறிந்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் ஆகியும் சல்மானால் இன்னும் அவரை மறக்க முடியவில்லையோ? என்று ஆச்சரியப்படுகின்றனர்.

Salman Khan Flying Kiss to Aishwarya Rai at Star Screen Awards Performance

Share.
Leave A Reply

Exit mobile version