யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இன்றைய தினம் 185 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

சாட்சி விசாரணைகளுக்கு இன்று 288 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் H.W. குணதாச குறிப்பிட்டார்.

இன்றைய அமர்வில் 53 புதிய முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாகவும் இன்று சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன.

எனது மகளை கதறகதற வெள்ளைக் காரில்  ஏற்றிச் சென்றனர்.

showImageInStoryவீட்­டிற்கு வந்த நால்வர் வீட்டில் உள்­ள­வர்­களை அச்­சு­றுத்தி எனது மகளை உடுத்த உடை­யுடன் கதறக் கதற வெள்­ளைக்­காரில் ஏற்றிச் சென்­றனர்.

காரில் கொண்டு செல்­லப்­ப­டும்­போது எனது மகளின் கத­றலை அப்­பி­ர­தேசம் முழுவதும் உணர்ந்­தி­ருந்­தது.

சின்­னக்­கடை இரா­ணுவ முகாமின் பொறுப்­பா­ள­ராகச் செயற்­பட்ட டெடி­கம என்ற இரா­ணுவ பொறுப்­ப­தி­கா­ரிக்கும் இச் சம்­ப­வத்­துடன் நெருங்கி தொடர்பு இருக்­கின்­ற­தென தாய் ஒருவர் கண்­ணீ ருடன் சாட்­சி­ய­ம­ளித்தார். காணாமல் போனோர் தொடர்­பான

ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அமர்­வுகள் இரண்­டா­வது நாளாக யாழ்.மாவட்ட செய­ல­கத்தில் நேற்று இடம்­பெற்­றது. இதன்­போதே பாஷை­யூரைச் சேர்ந்த ரீட்­டாம்மா என்ற தாயார் சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

1996ஆம் ஆண்டு எனது மக­ளான கொன்­ஸியை தாத்தா பாட்­டியின் கவ­னத்தில் விட்­டு­விட்டு நான் பணி­நி­மிர்த்தம் சிங்­கப்­பூ­ருக்குச் சென்றி­ருந்தேன்.

அக்­கா­லப்­ப­கு­தியில் விடு­தலைப் புலிகள் பின்­வாங்­கி­யி­ருந்­த­மையால் இரா­ணு­வத்­தினர் யாழ்ப்­பாண பிர­தே­சத்­திற்கு வருகை தந்திருந்திருந்­தனர்.

இச் சந்­தர்ப்­பத்தில் க.பொ.த. உயர் தர பரீட்­சையில் மீண்டும் தோற்­று­வ­தற்­காக எனது மகள் தனியார் கல்வி நிலை­யத்தில் கற்றுக் கொண்­டி­ருந்தார்.

இரா­ணு­வத்­தினர் முன்­னேறிக் கொண்­டி­ருந்­த­மையால் எனது மகள் எனது தாய் தந்­தையர் வெவ்வேறு பிரி­வாக சென்று விட்­டனர். அதன் பின்னர் ஒரு வழி­யாக மீண்டும் ஒன்று சேர்­வ­தற்­கான வாய்ப்புக் கிட்­டி­யது.

எனது மற்­றொரு மகளின் கணவர் சின்­னக்­கடைச் சந்­தியில் பேக்­கரி நடாத்­திக்­கொண்­டி­ருந்தார். எனது மகளை மீண்டும் வீட்­டுக்குக் கூட்டிச் செல்­வ­தற்­காக அங்கு வரு­மாறு அறி­வித்­தி­ருந்தார்.

அந்­நி­லையில் எனது மகள் குறித்த பேக்­க­ரிக்கு வருகை தந்­த­போது திடீ­ரென இரா­ணு­வத்­தினர் சுற்றி வளைத்து சின்­னக்­கடை பகு­தி­யி­லுள்ள இரா­ணுவ முகா­மொன்­றுக்குக் கொண்டு சென்­றனர். அன்று மாலை­யி­லேயே எனது அம்­மாவும் மரு­ம­கனும் முகா­முக்குச் சென்று மகளை விட்டு விடு­மாறு கோரினர்.

அப்­போது அந்த முகா­முக்குப் பொறுப்­பா­ள­ரான டெடி­கம என்ற இரா­ணுவ அதி­காரி ஒவ்­வொரு நாளும் கையொப்பம் இடு­வ­தற்­காக முகா­முக்கு வர­வேண்டும் எனப் பணித்­தி­ருந்தார். இதற்­கி­ணங்க அவர் ஒவ்­வொரு நாளும் சென்று கையொப்பம் இட்டு வந்தார்.

இந்­நி­லையில் 1996ஆம் ஆண்டு ஜூலை­மாதம் 25 ஆம் திகதி எமது வீட்­டுக்கு அரு­கி­லுள்ள தேவா­ல­யத்தில் திரு­விழா நடை­பெற்­றது. அங்கு சென்று விட்டு எனது அம்மா மற்றும் மகள்மார் வீட்­டுக்குத் திரும்­பினர்.

எனது அப்பா வய­தா­னவர். அவ­ருடன் எனது மக­ளையும் கர்ப்­பி­ணி­யாக இருந்த மற்­றொரு மக­ளையும் விட்டு விட்டு எனது தாயாரும் மரு­ம­கனும் வெளியில் சென்­றனர். அச்­ச­ம­யத்தில் திடீ­ரென எமது வீட்டு வாயிலில் வெள்ளைக் கார் ஒன்று வருகை தந்­தி­ருந்­தது.

அதி­லி­ருந்து கறுப்பு உடை மற்றும் துப்­பாக்­கி­க­ளுடன் நால்வர் வந்து இறங்­கினர்.

திடீ­ரென வீட்­டுக்குள் நுழைந்து குளித்துக் கொண்­டி­ருந்த கர்ப்­பி­ணி­யான மகளை அழைத்து அறைக்குள் பூட்டி விட்டு எனது தகப்­ப­னாரை அச்­சு­றுத்­தி­விட்டு கொன்­ஸியை கதறக் கதற வெ ள்ளைக் காரில் ஏற்றிச் சென்­றார்கள்.

காப்­பாற்­றுங்கள் என கொன்ஸி கத­றி­யதை எமது வீட்டை அண்­டிய பிர­தே­சத்­த­வர்கள் அனை­வ­ருமே அறி­வார்கள். எனது அம்­மாவும் மரும­கனும் வீட்­டுக்குத் திரும்­பி­ய­வுடன் சம்­ப­வத்தை அறிந்து உட­னேயே டெடி­கம பொறுப்­பா­க­வி­ருந்த இரா­ணுவ முகா­முக்குச் சென்று கொன்­ஸியை ஒப்­ப­டைக்­கு­மாறு கோரினோம்.

இருப்­பினும் அவர்கள் அது­பற்றி தமக்குத் தெரி­யாது எனக் கூறி­விட்­டனர். அத்­துடன் கொன்ஸி கையொப்பம் இடு­வ­தற்கு அதனை அடுத்த தினங்­களில் சென்­றி­ருக்­காத போதும் குறித்த முகாமைச் சேர்ந்த எந்­த­வொரு இரா­ணு­வத்­தி­னரும் ஏன் வர­வில்­லை­யென கேள்வி எழுப்பவே­யில்லை. இது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் சிங்கப்பூரிலிருந்து வந்தவுடன் எனது அம்மா அப்பா இவ்விடயத்தை என்னிடம் கூறினார்கள். மனித உரிமை ஆணைக்குழு, ஐ.சி.ஆர்.சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் நான் முறையிட்டு விட்டேன்.

தற்பொழுது எனது அப்பாவும் அம்மாவும் உயிருடன் இல்லை. நான் மட்டுமே இன்று தனியாக இருக்கின்றேன் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version