அவுஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயதுடைய பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்ற, விடுதியில் மசாஜ் செய்யும் நபர் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம், எல்ல பகுதியிலுள்ள மசாஜ் செய்யும் மத்திய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

எல்ல பகுதியில் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய நாட்டுப் பிரஜையான இளம்பெண், மேற்படி மசாஜ் செய்யும் மத்திய நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு, மசாஜ் செய்யும் நபர், குறித்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து அப்பெண், எல்ல பொலிஸ் நிலையத்தில் முறையிடவே, எல்ல பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர், பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எல்ல பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணொருவர் கடத்தப்பட்டு 4 பேரால் வல்லுறவு: கண்டியில் சம்பவம்

2951-woman-gang-raped-in-kandy2090703186கண்டி நகரில் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணொருவர் கடத்தப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

35 வயதான குறித்த பெண் தனது நண்பருக்காக வீதியில் தனியாக காத்திருந்துகொண்டுள்ளார்.

இதன்போது முச்சக்கர வண்டியில் வந்த 4 பேர் அடங்கிய கும்பலொன்று அவரை கடத்திச் சென்றுள்ளது.

குறித்த நான்கு பேரும் அப்பெண்ணை காட்டுப்பகுதியொன்றுக்கு அழைத்துச் சென்று இரவு 12 மணி வரை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

பின்னர் அவரது வீட்டு விபரங்களைக் கேட்டு அவரை வீட்டின் அருகில் விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் அப் பெண் மற்றும் அவரது உறவினர்கள் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பெண் கண்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றுபவர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கடந்த 12 ஆம் திகதி கண்டி தென்னகும்புர பாலத்தின் அருகே வைத்தே அவர் கட த்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இச்சம்பவத்தின் போது பெண்ணிடமிருந்த 1 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் அவர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை மேலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version