இயேசு கிறிஸ்து வெண்மையான ஆடையுடன், நீண்ட முடியுடன் ஒடுங்கிய கன்னங்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களைதான் நாம் பார்த்திருக்கிறோம்.

தற்போது இயேசு கிறிஸ்துவின் உண்மையான முகம் இப்படிதான் இருந்திருக்கும் என்று இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ துறை ஓவியரான ரிச்சர்ட் நீவ் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின்னர் ஒரு வரைபடத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையங்களில் வைரலாகியுள்ளது.

 jes-
மான்செஸ்டர் பல்கலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரிச்சர்ட், இதற்காக தடயவியல் அறிவியலை கொண்டு, பல்வேறு ஆராய்ச்சிக்கு பிறகு இந்த வரைபடத்தை தயாரித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து வாழ்ந்தாக கூறப்படும் ஜெருசலேம் நகரில் பல மாதங்களாக முகாமிட்டு, அந்த பகுதியில் இருந்து கிடைக்கபெற்ற மண்டை ஓடுகளை வைத்து நடத்திய ஆராய்ச்சியின் முடிவுக்கு பின்னர் முகத்தில் 3 டி முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்திற்கு பின்னர் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைபடத்தின்படி இயேசு கிறிஸ்துவுக்கு நீண்ட தலைமுடியில்லை, அவரது கன்னங்கள் தடிமனாக உள்ளது. மேலும் சிவப்பு வர்ணத்திலும் கிறிஸ்து இல்லை. சாதாரண மனிதர் போல காட்சியளிக்கிறார்.

இந்த புகைப்படம் குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக மானுடவியல் துறை பேராசிரியர் அலிசன் கோல்லாவே கூறுகையில், ”இந்த முறையில் உருவாக்கப்பட்டும் முகவாட்டங்கள் ஓரளவுக்கு உண்மையாக இருக்கும். இதே போன்று பல மகான்களின் முகத் தோற்றம் எப்படி இருந்திருக்கும் என்றும் அறிந்து கொள்ள முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Share.
Leave A Reply

Exit mobile version