யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்ட சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரான வர்த்தகர் ஒருவர், தான் தற்செயலாக தனது அந்தரங்க உறுப்பை மேற்படி யுவதிக்குள் திணித்திருக்கலாம் என நீதிமன்றில் கூறியதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
46 வயதான இஷான் அப்துல்அஸீஸ் எனும் இவ்வர்த்தகர், லண்டனிலுள்ள தனது வீட்டில் 18 வயதான யுவதியொருவரை வல்லுறவுக்குபடுத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.
இரவுநேர விருந்து நிகழ்வொன்றில் மது அருந்திய பின்னர் அவ்வீட்டிலேயே உறங்கிய மேற்படி யுவதி, விழித்தெழுந்தபோது, தனக்கு மேல் அப்துல் அஸீஸ் கிடந்ததாகவும் தான் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும் முறைப்பாடு செய்தார்.
அவ்வேளையில் இந்த யுவதியின் அந்தரங்க உறுப்புக்குள் அப்துல் அஸீஸின் உறுப்பு இருந்ததாக சட்டத்தரணி ஜொனதன் டேவிஸ் செவாத் வார்க் கிறவுண் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது கூறினார்.
ஆனால், இஷான் அப்துல் அஸீஸ் தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்தார். அன்றைய தினம் இந்த யுவதியின் நண்பியான 24 வயதான யுவதியொருவருடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டதாக அப்துல் அஸீஸ் ஒப்புக்கொண்டார்.
எனினும், 18வயதான யுவதியுடன் தான் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனக் கூறினார்.
எனினும், 18 வயதான யுவதியின் அந்தரங்கப் பகுதியில் அப்துல் அஸீஸின் மரபணுக்கள் இருந்தமை கண்டறியப்பட்டது.
இதற்கு பதிலளித்த அப்துல் அஸீஸ், தான் உறக்கத்தில் அந்த யுவதி மீது சரிந்துவிழுந்தபோது தற்செயலாக தனது உறுப்பு மேற்படி யுவதியின் உறுப்புக்குள் சென்றிருக்கலாம் எனவும் இதுவே தனது மரபணு அவரிடம் இருந்தமைக்கான காரணமாக இருக்கலாம் எனவும் கூறினார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இஷான் அப்துல் அஸீஸ் குற்றவாளியல்ல என தீர்ப்பளித்துள்ளது.