1979 இல் சோவியத் யூனியன் (ரஷ்யா) சிதைவுற்ற பின் மனித வரலாற்றில் இதுவரை அறிந்திராத ஒரு இராணுவ பலம் மிக்க நாடாக அமெரிக்கா பரிணமிக்கத் தொடங்கியது.
இரும்புத் திரை நாடென அறியப்பட்ட ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின் உலகம் முழுவதும் ஜனநாயகம் தழைத்தோங்கும், அமைதியும் சுதந்திரமும் தாண்டவமாடும் என உலக மக்கள் அனைவரும் கனவு கண்டனர்.
ஆனால், ஆயுத உற்பத்தி, எண்ணெய் வளம், வங்கித்துறை, நிதித்துறை, கைத்தொழில் துறை, ஊடகத்துறை ஏனைய கூட்டாண்மை துறை என எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் யூத சக்திகள் ஒன்றிணைந்து அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் ஏனைய மூன்றாம் மண்டல நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலின் கீழ் இழுத்துச் செல்லத் தொடங்கின.
சிவப்பு கம்யூனிஸத்துக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாகக் கருதிய அவர்கள், அந்த இடத்தில் இஸ்லாத்தை வைத்துப் பார்க்கத் தொடங்கியதோடு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு செயல் வடிவம் கொடுத்தனர்.
முஸ்லிம்களை அவர்கள் தமது ‘நம்பர் வன்’ பொது எதிரியாகப் பார்க்கத் தொடங்கினர். அந்த அடிப்படையில் முஸ்லிம் நாடுகளைச் சூறையாடத் தொடங்கினர்.
மத்திய கிழக்கை சீர்குலைக்கும் இஸ்ரேலின் பிரதானமான இந்தத் திட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா என எல்லோருமே பங்கேற்கத் தொடங்கின.
இவர்களின் பிரதான பிரசார தொனிப்பொருளாக இஸ்லாம் ஒரு காலம் கடந்த மார்க்கம். அது வன்முறை வெறுப்புணர்வு என்பனவற்றைத் தூண்டுகின்றது.
முஸ்லிம்கள் பிற்போக்கு சிந்தனை கொண்ட வன்முறையாளர்கள் போன்ற கோஷங்கள் அமைந்தன. யூத ஆதரவு மேற்குலக ஊடகங்களால் இந்தப் பிரசாரம் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு மிகக் கவனமாகவும் ஆக்கபூர்வமாகவும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த ஊடகங்கள் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுக ளின் யுத்தவெறி கொண்ட செயற்பாடுக ளின் பிரிக்க முடியாத அங்கங்களாக மாறின.
இவ்வாறு கூட்டணி அமைத்த இந்த நாடுகள் இணைந்துதான் மத்திய கிழக்கில் காணப்படும் இன்றைய எல்லாப் பிரச்சினைகளையும் தோற்றுவித்தன. வரலாற்றின் மத்திய காலப் பகுதியில் கூட காணக்கிடைக்காத காட்டுமிராண்டித்தனங்கள் இவ்வாறுதான் அரங்கேற்றப்பட்டன.
இன்றைய சிரியா
ஈராக்கின் அன்றைய ஆட்சியாளர் சதாம் ஹுசைன் 1990இல் அமெரிக்காவால் தூண்டப்பட்டு குவைத் மீதான ஆக்கிரமிப்பு இடம்பெற்றது. அதன் பிறகு ஒவ்வொரு முஸ்லிம் நாடாக ஆக்கிரமிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு நாசமாக்கப்பட்டன.
செல்வச் செழிப்பில் வாழ்ந்த மக்கள் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்து அவலப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான், செச்னியா, பொஸ்னியா, கொசோவோவா, சோமாலியா, அல்ஜீரியா, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள பலஸ்தீன பிரதேசம், ஈரான், ஈராக், லிபியா இன்று சிரியா, மத்திய ஆசிய குடியரசுகள், ஒரு காலத்தில் பிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்த ஆபிரிக்கா கண்ட முஸ்லிம் நாடுகளான மாலி, சாட், நைகர், சீனாவில் உள்ள ஊகுர், இந்தியா,தென் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் என்று இந்தப் பட்டியல் நீள்கின்றது.
ஐரோப்பாவில் இந்தப் பிரச்சினை பொஸ்னியாவில் தொடங்கப்பட்டது. 1992 சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பொஸ்னியா ஹெர்ஸகோவினா தனி நாடாக உருவானது.
நீலக் கண்களைக் கொண்ட ஐரோப்பியர்களான இந்த முஸ்லிம்களுக்கு எதிராக சேர்பிய இனத்தவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய படைகளால் தூண்டி விடப்பட்டனர்.
இதன் விளைவு பொஸ்னிய நகரமான செரப்ரனிகாவில் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்தக் கொலைத் திட்டத்தை முன்கூட்டியே அறிந்திருந்தும் கூட அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ அதைத் தடுத்து முஸ்லிம்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் சோகமான வரலாறு.
இதனிடையே நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் மீதான செப்டெம்பர் 11 தாக்குதல் இடம்பெற்றது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலின் இரகசிய உளவு சேவையான மொஸாட் தான் காரணம் என்று பல தகவல்கள் ஆதாரங்கள் வெளியாகிய போதிலும் கூட முஸ்லிம்கள் மீதே தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டது.
முஸ்லிம் நாடுகள் மீது அழிவு நோக்கம் கொண்ட ஆக்கிரமிப்புத் திட்டத்துக்கான ஒரு முன்னோடி செயற்பாடாகவே அமெரிக்க, இஸ்ரேல் உளவு பிரிவினர் இணைந்து இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டனர்.
செப்டெம்பர் 11 தாக்குதலின் பின் தான் பயங்கரவாதத்துக்கான யுத்தம் பிரகடனம் செய்யப்பட்டது. மத்திய கிழக்கை மட்டுமன்றி அதற்கு அப்பால் வாழும் சுமார் 1.5 பில்லியன் முஸ்லிம்களை இலக்குவைத்து இந்தப் பிரகடனம் செய்யப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போர் மிகவும் விசாலமானது. அரசியல், சமூகம், சமயம், கலாசாரம், இராணுவம், பொருளாதாரம், நிதி என உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் வாழ்வியலின் எல்லாப் பிரிவுகளையும் அது இலக்கு வைத்தது.
இந்தத் திட்டத்துக்கு எதிராக எழுந்த எல்லாக் கருத்துக்களும் நசுக்கப்பட்டன. இந்த பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் மூலம் அமெரிக்க சியோனிஸ இலக்குகளை அடைவதற்குத் தடையாக இருந்த மத்திய கிழக்கு நாடுகளின் ஆட்சியாளர்கள் படிப்படியாக அகற்றப்பட்டனர்.
மத்திய கிழக்கை தங்களுக்கு ஏற்ற வகையில் மீள வடிவமைக்கும் பணியை அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டன.
முஸ்லிம் நாடுகளில் உள்ள பள்ளிவாசல்கள், பாடசாலைகள் உட்பட அனைத்து நிறுவனங்களும் அமைப்புக்களும் சந்தேகப் பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்டன.
இவற்றை அகற்ற வேண்டுமென்ற கூக்குரல் மேற்குலக ஊடகங்கள் வாயிலாக எழுப்பப்பட்டன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாம் மார்க்கம் வேகமாகப் பரவி வருவதை தடுக்கும் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அடிப்படைவாத கிறிஸ்தவ சிந்தனைகளுக்கு இந்த ஊடகங்கள் தூபமிட்டன.
இதன் தொடராகக் கருத்துச் சுதந்தி ரம் என்ற பெயரில் இஸ்லாத்தையும் அதனைப் போதித்த இறை தூதரையும் அவமதிக்கும்வகையிலான கேலிச் சித்திரங்களும் ஏனைய பிரசுரங்களும் வெளியிடப்பட்டன.
2003இல் டொனி பிளேயரும் ஜோர்ஜ் புஷ்ஷும் ஈராக் மீது போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். 1990இல் குவைத் ஆக்கிரமிப்புக்குப் பிறகு ஈராக் பாரிய அழிவு தரும் ஆயுதங்களைத் தயாரித்து பதுக்கி வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ஈராக் மீது இதுவரை நிரூபிக்கப்படாத இந்தப் போலிக் குற்றச்சாட்டின் பேரில் குண்டு மழை பொழியப்பட்டு கிட்டத்தட்ட அது கட்டாந்தரை ஆக்கப்பட்டது. 18 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சுமார் ஆறு லட்சம் ஈராக்கியர்கள் அகதிகளாக்கப்பட்டனர். கிட்டத்தட்ட அதே அளவானவர்கள் உள்நாட்டில் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஈராக்கின் விலைமதிப்பற்ற நூதனசாலை மற்றும் எண்ணெய் வளங்கள் என எல்லாமே சூறையாடப்பட்டன.
இங்கு செறிவு குறைந்த யுரேனிய ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதால் இன்னமும் உருவச் சிதைவுடனேயே அதிகமான குழந்தைகள் பிறக்கின்றன. இதற்கு மேலதிகமாக ஐக்கிய நாடுகள் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட பொருளாதாரத் தடைகள் சனத்தொகையை கிட்டத்தட்ட அழித்து விட்டது.
இவற்றுக்கு அப்பால் நாகரிகம் அடைந்த மனித சமூகத்தால் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் உட்பட வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இன்னும் பல அசிங்கங்களை அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் அரங்கேற்றின. பாரம்பரியமான சமூக அமைப்புக்குள் நாகரிகமாகவும் கட்டுக்கோப்பாகவும் வாழ்ந்த ஈராக் மக்களின் கலாசார விழுமியங்கள் யாவும் உருக்குலைக்கப்பட்டன.
இந்தக் கொடுமைகளுக்காகத் தான் அமெரிக்காவின் பிரபல பாடகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஹெரிபொலபொன்ட்டே உலகின் மிகப் பெரிய பயங்கரவாதி ஜோர்ஜ் புஷ் தான்’ என்று வர்ணித்தார்.
இந்த மக்கள் எந்த வகையிலும் அமெரிக்காவுக்கோ அல்லது பிரிட்டனுக்கோ அச்சுறுத்தலாக இருக்கவில்லை. ஆனால், அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் இத்தனை இன்னல்களையும் அழிவுகளையும் சந்திக்க நேர்ந்தது.
அவர்கள் செய்த ஒரே குற்றம் எண்ணெய் வளம் மிக்க பூமியில் பிறந்து வளர்ந்ததுதான். எந்த விலை கொடுத்தேனும் அந்த எண்ணெய் வளங்களை தனதாக்கி கொள்வதிலேயே அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் ஆர்வம் காட்டின.
இதேபோல் தான் லிபியாவிலும் நடந்தது. ஆபிரிக்காவில் எண்ணெய் வளமும் செல்வமும் மிக்க நாடாக லிபியா காணப்பட்டது. அந்த மக்கள் மிகவும் உயர்தரமான வாழ்க்கை நிலையை அனுபவித்தவர்கள்.
அரபு எழுச்சி அல்லது அரபு வசந்தம் என்ற பெயரில் அரபு நாடுகளில் கிளர்ச்சிகள் தூண்டி விடப்பட்டபோது லிபியர்களும் ஓரளவு சுதந்திரம் வேண்டி போராடத் தொடங்கினர்.
அதன் விளைவு அந்த சாதாரண போராட்டம் ஒரு மாபெரும் ஆயுத போராட்டமாகத் தூண்டி விடப்பட்டது. இந்த குழப்ப நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ‘மனிதாபிமான தலையீடு’ என்ற சுலோகத்தின் கீழ் அந்த நாட்டுக்குள் ஊடுறுவி குண்டு மழை பொழிந்து லிபியா என்ற வளம் மிக்க நாட்டையே குட்டிச் சுவராக்கிவிட்டன.
லிபியா மற்றொரு கொலைக்களமாக மாற்றப்பட்டது. இதன் விளைவு லிபியாவிலும் மக்கள் வாழ முடியாத சூழல் உருவாக்கப்பட்டு தமது வாழ்வாதாரங்களையும் சொத்து சுகங்களையும் சுகபோகங்களையும் விட்டு விட்டு லிபிய மக்களும் உலக அகதிகள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது.
அண்மைய ஆய்வொன்றின் படி உல கில் 59.5 மில்லியன் அகதிகள் உள்ளனர். அவர்களுள் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்று தெரிய வந்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்க ஐரோப்பிய சதி என்பது ஒன்றும் புதிய விடயமல்ல.
பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், சோ வியத் ரஷ்யா என்பன இணைந்து தான் பலஸ்தீனர்களைக் கொன்று குவிக்க யூதர்களுக்கு உதவின. பலஸ்தீன மக்களின் காணிகளை அபகரித்து அதில் இஸ்ரேல் என்ற யூத நாட்டை இந்தக் கூட்டணிதான் உருவாக்கியது.
1930 முதல் இந்த முயற்சியில் யூதக் குழுக்கள் பலஸ்தீனர்களுக்கு எதிராக 60க்கும் மேற்பட்ட பாரிய அளவிலான படுகொலைச் சம்பவங்களைப் புரிந்துள்ளனர்.
பலஸ்தீன மக்கள் இன்றும் தமது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு பிரிவினராகவே காணப்படுகின்றனர். பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தலைமையிலான ஐரோப்பிய காலனித்துவ வாதிகள்தான் அரபு நாடுகளைக் கூறுபோட்டு அவற்றில் தமக்குத் தேவையானவர்களை ஆட்சி பீடங்களில் அமர்த்தியவர்கள்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இஸ்ரேல் ஒரு ஆதிக்க சக்தியாக தனிப்பெரும் வல்லரசாகத் திகழ வழிவகுப்பது தான் இந்த சதித் திட்டத்தின் ஒட்டு மொத்த நோக்கம்.
முஸ்லிம்கள் இந்த ஆதிக்க வல்லரசின் கீழ் படிப்பற்றவர்களாக, பாமரர்களாக, பட்டினியால் வாடுபவர்களாக, பின் தள்ளப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பாரிய சதித்திட்டம்.
அப்போதுதான் இன்று போல் என்றும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்யாவும் தமது விருப்பப்படி முஸ்லிம் நாடுகளின் வளங்களை சூறையாட முடியும். இதுதான் உண்மையான நோக்கம்.
கடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் உலகில் உண்மையான ஒரு இஸ்லாமிய ஜனநாயக நாடு உருவாவதை அனுமதிக்கவும் இல்லை. அதை விரும்பவும் இல்லை.
2006இல் பலஸ்தீனத்தின் மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகளில் மக்கள் விரும்பிய மாற்றத்துக்கு இடமளிக்கப்படவில்லை. அண்மையில் எகிப்தில் சுமார் 60 வருடங்களுக்குப் பின் மக்கள் சுதந்திரமாக வாக்களித்து தெரிவான ஆட்சி நீடிக்க இடமளிக்கப்படவில்லை. அது மேற்குலகுக்குத் தேவையான இராணுவ சதியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்துல் பத்தாஹ் அல் சிசி
சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பதாகக் கூறப்படும் வொஷிங்டன், லண்டன், பாரிஸ், ஏன் மாஸ்கோவில் இருப்பவர்கள் கூட எகிப்தில் இராணுவ சதி மூலம் ஆட்சிக்கு வந்த அல்பத்தாஹ் அல் சிசிக்கு செங்கம்பள வரவேற்பளித்துள்ளனர். ஆனால், மக்கள் விருப்பப்படி தெரிவு செய்யப்பட்ட தலைவர் மொஹமட் முர்ஸி சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
1979இல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின் கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் அந்தக் கட்டமைப்பின் கீழ் இருந்த கிறிஸ்தவ நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, செக்குடியரசு, ஸ்லோவாக்கியா போன்ற பல நாடுகள் தமது விருப்பப்படி மேற்குலக கிறிஸ்தவ நாடுகளுடன் இணைந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட செச்னிய குடியரசு க்கு மட்டும் இன்னும் ரஷ்யா எதுவித சுதந்திரத்தையும் வழங்கவில்லை. செச்னி யாவில் ரஷ்யா கட்டவிழ்த்து விட்டுள்ள காட்டுமிராண்டித்தனம் காரணமாக கடந்த 20 வருடங்களாக அந்தப் பகுதி மக்கள் புன்னகையை கூட மறந்துவிட்டனர் என்று வர்ணிக்கப்படுகின்றது.
இங்கு மட்டுமன்றி மத்திய ஆசிய பிராந்தியத்தின் கீழ் வரும் எழில்மிக்க நாடுகளான அஸர்பைஜான், தஜிகிஸ்தான், கிரிகிஸ்தான், கஸகஸ்தான், துருக்மனிஸ் தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய பகுதிகளிலும் கூட ரஷ்யா இரும்புப் பிடியையே கொண்டுள்ளது. பட்டுப் பாதையை உள்ளடக்கிய இந்தப் பிராந்தியங்கள் ஒரு காலத்தில் இஸ்லாமிய நாகரிகம் செழித்தோங்கிய பகுதிகளாகும்.
சீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சிஞ்சியாங் மாநிலத்தில் சீனா கடும் அடக்கு முறையைப் பிரயோகித்து வருகின்றது. சமய சுதந்திரம், சுயாட்சி என்பனவற்றுக்காகப் போராடும் மக்களை சீனா இரும்புக் கரம் கொண்டு நசுக்கி வருகின்றது.
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து பிரிந்து வந்த பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவில் இருந்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் துடைத்தெறியும் செயற்பாடுகள் கச்சிதமாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாறுதான் ஒவ்வொரு முஸ்லிம் நாடும் அழிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால் மேற்குலகின் ஆயுத உற்பத்தித்துறை கோலாகலமான முன்னேற்றம் கண்டு வருகின்றது.
இதனால் உண்மை யான நன்மைகளை அனுபவித்து வருபவர்கள் ஆங்கிலோ – அமெரிக்க எண் ணெய் வர்த்தகர்கள், அவர்களின் பங்குச் சந்தைகள், நிதி நிறுவனங்கள், ஏனைய கூட்டாண்மை நிறுவனங்கள், இராணுவ கைத்தொழில் உற்பத்தி நிறுவனங்கள், அரசியல் தலைமைகள் மற்றும் இஸ்ரேல் என்பனவே.
இந்தப் பின்னணியில்தான் அண்மையில் நடந்த பாரிஸ் தாக்குதல் பற்றியும் நோக்க வேண்டியுள்ளது. இது தொடர்பான கேள்விகள் அதிகரித்துள் ளனவே தவிர பதில்கள் போதியதாக அமையவில்லை.
சிரியாவில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறிக் கொண்டு அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலில் இப்போது பிரான்ஸும் களமிறங்கியுள் ளது. ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்கள் மீது அர்த்தமற்ற கெடுபிடிகள் பிரயோ கிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் அவர்கள் பல அசௌகரி யங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இஸ்லாமும் அதனைப் பின்பற்றுகின்றவர் களும் கடந்த 1400 வருடகால வரலாற்றில் ஒரு போதும் இந்தளவுக்கு அவமானப் படுத்தப்பட்டதில்லை. இஸ்லாத்தில் அடி ப்படைவாதம் என்ற பேச்சுக்கே இட மில்லை.
ஒரு போதும் இஸ்லாம் அதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. முஸ்லிம்கள் மீது மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு ஏவி விடப்பட்ட வன்முறைகள் காரணமா கவே தங்களது உரிமைகளையும் கௌர வத்தையும் காப்பாற்றிக் கொள்ள அவர்களும் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட் டுள்ளனர்.
மேலைத்தேச நாடுகளின் இந்த சதித் திட்டம் பல நூற்றாண்டுகளாக அமுல் செய்யப்பட்டு வந்த போதிலும் அது தனது மோசமான கொடூர முகத்தை காட்டத் தொடங்கியது செப்டெம்பர் 11 தாக்கு தலின் பின்னர்தான். அமெரிக் காவால் தொடங்கப்பட்ட இந்தக் கொடூரத்தை யூதசக்திகள் இப்போது தமதாக்கி தமது நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப நெறிப்படுத்தி வருகின்றன.