மாத்தளை பல்லேபொல, மில்லவான மானிங்கமுவ பிரதேசத்தில் பெக்கோ இயந்திர வாகனம் ஒன்று பாதையை விட்டு விழகி 35 அடி பள்ளத்தில் உள்ள வீடொன்றில் வீழ்ந்ததில் வீடு முற்றாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நேரத்தில் சத்தம் கேட்டவுடன் தாய் தனது குழந்தைளுடன் வெளியேறியதால் குழந்தைகள் மூன்று பேருடன் தாயும் உயிர்தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில் குழந்தைகள் மூவரும் தொலைகாட்சி பார்வையிட்டு கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

குறித்த பெக்கோ இயந்திர வாகனம் பல்லேபொல பிரதேச சபைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version