பூவரசங்குளம் கந்தன்குளம் கிராமத்தில் வசித்துவரும் மணியம் பூமணி குடும்பத்தினரின் இளைய மகள் நிரோஜினி (வயது20), கடந்த 15.09.2015 அன்று வேலைக்குச்சென்று திரும்பும்போது காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் முறையிட்டுள்ளனர்.

பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவியான (தரம் 10 வரை கற்றுள்ளார்) நிரோஜினி, சம்பவம் நடைபெற்ற 15.09.2015 அன்று நாவல் நிறத்திலான பாவாடை மற்றும் மேற்சட்டை அணிந்திருந்ததாகவும், 077 886 2964 எனும் இலக்கத்தையுடைய கைப்பேசியை தனது பாவனையில் வைத்திருந்ததாகவும், குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியவில்லை என்றும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த 10 மாதம் றோஸ் நிறத்திலான பஞ்சாபி உடையுடன் நிரோஜினியை செட்டிக்குளம் பிரதேசத்தில் கண்டதாக வயோதிபத்தாயார் ஒருவர் பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, அவரது தகவலின் அடிப்படையில் அங்கு சென்று தேடியும் நிரோஜினியை கண்டுபிடிக்க முடியவில்லை.

d6094a47-e34c-48f8-9725-0eb91606781d

எனவே தயவுசெய்து நிரோஜினி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், அல்லது நிரோஜினியை எங்கேனும் இனம் காண்பவர்கள் உடனடியாக 024 320 1880 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் 071 4347 480 எனும் கைப்பேசி இலக்கத்துக்கோ தகவல் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Share.
Leave A Reply

Exit mobile version