பெர்லின்: இங்கிலாந்து நாட்டில் ஒரு பாடல் உண்டு. அது ஹிட்லரைக் கிண்டலடிக்கும் பாட்டு.. அந்தப் பாடல் தற்போது உண்மையாகி விட்டது.
சமீபத்திய ஹிட்லரின் மருத்துவ அறிக்கைகள் குறித்த ஒரு ஆய்விலிருந்து அவருக்கு ஒரே ஒரு விதைதான் (testicle) இருந்தது தெரிய வந்துள்ளது. இந்தக் குறைபாட்டுக்கு cryptorchidism என்று பெயராகும். அதாவது வலது பக்கம் விதை இவருக்கு இல்லை.
இல்லை என்றால், விதையே இல்லை என்று அர்த்தம் கிடையாது. மாறாக உள்ளிருந்து வெளியே இறங்கவில்லை (undescended) என்று பொருளாகும்.
இந்த விவரத்தை ஜெர்மனியைச் சேர்ந்த வரலாற்று நிபுணர் ஒருவர் வெளிக் கொணர்ந்துள்ளார். ஹிட்லரின் பல்வேறு மருத்துவ ஆவணங்களைப் பரிசீலித்து இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளார்.
நீண்ட காலமாகவே ஹிட்லருக்கு ஒரு விதைதான் இருந்ததாக கூற்றுகள் உண்டு. இதை வைத்துத்தான் இங்கிலாந்தில் கிண்டல் பாட்டும் பல காலமாக இருந்து வருகிறது.
hitler
1923ல் சோதனை
1923ம் ஆண்டு ஹிட்லர் கைது செய்யப்பட்ட சமயத்தில் மருத்துவ சோதனை நடந்தது. அப்போது தயாரிக்கப்பட்ட ஆவணத்தில்தான் அவருக்கு விதைப் பையில் ஒரு விதை மட்டுமே இருந்தது தெரிய வந்து அதைப் பதிவு செய்துள்ளனர்.
வேறு பிரச்சினை இல்லை
இதுதவிர அவருக்கு உடலில் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஹிட்லரைப் பரிசோதித்த லான்டர்ஸ்பெர்க் சிறையின் மருத்துவ அதிகாரியான டாக்டர் ஜோசப் ஸ்டெய்னர் பிரின் என்பவர் எழுதியுள்ளார்.
ஏலத்தில் வந்த மர்மம்
இந்த மருத்துவ ஆவணங்கள் எங்கே என்பது தெரியாமல் இருந்த நிலையில், கடந்த 2010ம் ஆண்டு பவேரியாவில் நடந்த ஏலத்தில் இது ஏலம் விடப்பட்டது. ஆனால் பவேரிய அரசு உடனடியாக இதைப் பறிமுதல் செய்து விட்டது. சமீபத்தில்தான் இந்த ஆவணங்களை எர்லாங்கன் -நூரம்பர்க் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வுப் பேராசிராயிர் பீட்டர் பிளீச்மேன் விரிவாகப் படித்து ஆய்வு செய்து விஷயத்தை வெளியில் கூறியுள்ளார்.
இறங்காமல் உள்ளேயே தங்கியதால்
வழக்கமாக பிறப்புக்கு முன்பாக ஆண்களின் விதைகள் உடலுக்குள்ளேதான் இருக்கும். பிறக்கும்போது விதைகள் இரண்டும் வெளியே இறங்கி விதைப் பையோடு ஆணுறுப்புக்குப் பின்புறமாக வந்து விடும். சிலருக்கு வலது புற விதை மட்டும் இறங்காமல் போகும்போது இந்தக் குறைபாடு ஏற்படுகிறது.
குண்டு பட்டு சேதமாகவில்லை
முன்பு ஹிட்லரின் ஒரு பக்க விதை, துப்பாக்கிக் குண்டு பட்டு சேதமடைந்து விட்டதாக கூறப்பட்டு வந்தது. முதல் உலகப் போரின்போது இது நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அது உண்மை அல்ல என்று இப்போது தெரிய வந்துள்ளது.
Share.
Leave A Reply

Exit mobile version