பெய்ஜிங்: சீனாவின் ஷென்ஸன் நகரில் ஏற்பட்ட பயங்கர நிலச் சரிவில் சிக்கி 90 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் முக்கிய தொழில் நகரான ஷென்ஸனில் நேற்றுக் காலையில் பெய்த கன மழையையடுத்து, அங்குள்ள மண் மேடு சரிந்தது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்த 22 கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. மேலும், கட்டடங்களுக்கு அருகில் உள்ள எரிவாயு நிறுவனமும் வெடித்து சிதறியது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நாட்டின் முக்கிய லியூக்ஸி தொழிற் பூங்கா உள்ளது. அதில் உள்ள பல்வேறு கட்டடங்களும், ஊழியர்களின் பல்வேறு குடியிருப்புக் கட்டடங்களும் மண்ணுக்குள் புதைந்தன. இந்த நிலச் சரிவால் இடிந்து விழுந்த கட்டடங்களிலிருந்து 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். மேலும், 91 பேரைக் காணவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நிலச் சரிவு காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளன. அந்தக் காட்சி இங்கே…

 

POTD_Firefighters__3531824k

Share.
Leave A Reply

Exit mobile version