ரஷ்யாவைச் சேர்ந்த நபரொருவர், தனது 6 வயது மகனின் சிகையலங்காரம் தனக்குப் பிடிக்கவில்லை என்பதால் தனது மனைவி, தாயார் மற்றும் 6 பிள்ளைகளை கொலை செய்துள்ளார்.

ஒலேக் பெலொவ் எனும் இந்நபர் ரஷ்யாவின் நிஹ்னி நோவ்கோரட் நகரைச் சேர்ந்தவர். கடந்த ஓகஸ்ட் 4 ஆம் திகதி அவரின் வீட்டிலிருந்து அவரின் மனைவி மற்றும் 6 பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.

மற்றொரு கட்டடத்திலிருந்து ஒலேகின் தாயாரின் சடலம் மீட்கப்பட்டது. அதையடுத்து ஒலேக் பெலோவ் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேற்படி கொலைகளை தானே செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

இக்கொலைகளுக்கான காரணம் குறித்து அவர் கூறுகையில் “எனது மனைவி யூலியா (32) விவாகரத்து கோரியிருந்தார். அவர் எனது 6 வயதான மகனுக்கு கிளியைப் போல் தலைமயிர் வெட்டியிருந்தமை எனக்குப் பிடிக்கவில்லை. இதனால் நான் ஆத்திரமடைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

1381038இரு தடவை தாக்கப்பட்ட யூலியா பின்னர் உதவிகோரி தப்பியோடியபோது அவரை தான் துரத்திச் சென்று கோடாரியால் வெட்டியதாகவும் அதன்பின் தனது குழந்தைகளை வெட்டியதாகவும் பின்னர் 73 வயதான தாயையும் வெட்டியதாகவும் ஒலேப் பெலொவ் தெரிவித்துள்ளார்.

மேற்படி பிள்ளைகள் 1 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 19 வயதான யுவதியொருவர் 2014 அம் ஆண்டு வல்லுறவுக்குட்படுத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் ஒலேக் பெலொவ் மீது தாம் விசாரணை நடத்தி வருவதாக ரஷ்ய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version