ஹிருணிகா பிரமேச்சந்திரவுக்கு சொந்தமான டிபண்டர் வாகனமொன்றில் வந்த சிலர் நபரொருவரை நேற்று கடத்திச் சென்று தாக்குதல் நடத்தி பின்னர் வீதியில் விட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தெமடகொட மேம்பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள ஆடையகமொன்றில் கடமைபுரிபவர் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நண்பகல் 2.25 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் அவரைத் தாக்கி இரவு 8.30 மணியளவில் வீதியில் விட்டுச்சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 62-1859 என்ற இலக்கம் கொண்ட வாகனம் ஹிருணிகா பிரேமசந்திரவின் பெயரில் பதிவானதொன்ற தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனத்தின் இலக்கம் சீ.சீ.டிவி காணொளி ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த நபரை கடத்திச் சென்றுள்ளவர்கள் அவரை கொலன்னாவையில் உள்ள ஹிருணிக்காவுக்கு சொந்தமான கட்சி அலுவலகமொன்றுக்கு கொண்டு சென்று தாக்கியுள்ளனர்.

இதன்போது ஹிருணிகாவும் அங்கிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு குறித்த நபர் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

ஹிருணிகாவின் ஆதரவாளரொருவரின் மனைவியுடன் , தாக்குதலுக்குள்ளான நபர் தொடர்பொன்றைப் பேணி வந்ததாகவும் அதுவே தாக்குதலுக்கான காரணமென குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version