அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் சாங் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலுக்கு பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும் சிம்பு, அனிருத் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பாடலை இணையத்தில் லீக் செய்தது யார்? என்பது இதுவரை அதிகாரபூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து யூடியூப் இணையதளத்திடம் விளக்கம் கேட்டு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

இந்த கடிதத்திற்கு பதில் வந்தால்தான் இணையத்தில் லீக் செய்தது யார்? என்பது தெரியவரும்.

இந்நிலையில் பீப் சாங்கை சிவகார்த்திகேயன் தான் லீக் செய்ததாக இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக வதந்தி ஒன்று பரவி வருகிறது. இந்நிலையில் சிம்புவின் அட்மின் கையாளும் டுவிட்டரில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், பீப் பாடல் லீக் விவகாரத்திற்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒருசிலர் தேவையில்லாமல் அவரது பெயரை இந்த விஷயத்தில் இழுப்பதாகவும் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version