தமது உயிரைப் பணயம் வைத்து கிறிஸ்தவ பயணிகளை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய முஸ்லிம் பயணிகள் கென்யாவில் சம்பவம்
பஸ்ஸொன்றில் பயணித்த கிறிஸ்தவர்களின் உயிரை அதே பஸ்ஸில் பயணித்த முஸ்லிம் பயணிகள் தமது உயிரைப் பண யம் வைத்து தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய சம்பவம் கென்யாவில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டின் வட பகுதியிலுள்ள வீதியொன்றில் குறிப்பிட்ட பஸ் பயணித்துக் கொண்டிருந்த போது சுமார் 10 அல் ஷபாப் தீவிரவாதிகள் அந்த பஸ்ஸை தடு த்து நிறுத்தி உட்பிரவேசித்துள்ளனர்.
இதன்போது தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்த கிறிஸ்தவ பயணி களை முஸ்லிம் பயணிகளிடமிருந்து வேறுபடுத்தி அவர்களை சுட்டுக்கொல்வதற்கு தீவிரவாதிகள் முயன்றனர்.
இந்நிலையில் அங்கிருந்த முஸ்லிம் பயணிகள் கிறிஸ்தவ பயணிகளிடமிருந்து பிரிந்து தனியாக நிற்க மறுத்துள்ளனர்.
இந்நிலையில், தமது படுகொலை முயற்சியை கைவிட்ட தீவிரவாதிகள், தாம் மீண்டும் பிறிதொரு சமயம் திரும்பிவரப்போவதாக எச்சரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதற்கு முன் பல சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவர்களுடன் பயணித்த முஸ்லிம்களும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரு வருடத்துக்கு முன் கிழக்கு ஆபிரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செய ற்படும் தீவிரவாதிகள் பஸ்ஸொன்றில் பிரவேசித்து அதில் பயணம் செய்த முஸ்லி ம்கள் அல்லாத 28 பேரை படுகொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.