ஈக்குவடோரிலுள்ள பாலின மாற்றம் செய்துகொண்ட ஒரு தம்பதியினர் அடுத்த வருடம் தமது முதல் குழந்தையைப் பெறவுள்ளனர்.
இத்தம்பதியினரில் தற்போது ஆணாக உள்ளவரே கர்ப்பம் தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டியன் ரொட்றிகஸ் என்பவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். இவரின் காதலரான பெர்னாண்டோ மச்சாடோ பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர்.
அடுத்த வருடம் இத்தம்பதிக்கு குழந்தை கிடைக்கவுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் பாலின மாற்றம் செய்த ஒரு தம்பதியினர் பெற்றோராகவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
பெண்ணாகப் பிறந்து ஆணாக வாழும் பெர்னாண்டோ மச்சாடோ தற்போது 4 மாத கர்ப்பிணியாகவுள்ளார்.
பெர்னாண்டோ மச்சாடோ வெனிசூலா நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அவர் தனது காதலி டியனுடன் இணைந்து வாழ்வதற்காக ஈக்குவடோருக்கு குடிபெயர்ந்தார்.
இதனால், ஆணாகப் பிறந்த தனது மனைவி மூலம் அவர் கர்ப்பிணியாகியுள்ளார்.
தான் பாலின மாற்றம் செய்து ஆணாக மாறுவதற்கு தனது குடும்பத்தினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதாக மச்சாடோ கூறுகிறார். ஆனால் டியனின் குடும்பத்தினர் அவரை வெறுத்து ஒதுக்கினராம்.