ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட கொலைச் சம்­ப­வத்தின் பிர­தான சூத்­தி­ர­தாரி தாம் என்­பதை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உறு­திப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளா­ரென நவ­ச­ம­ச­மாஜ கட்­சியின் செய­லாளர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ன தெரி­வித்தார்.

கொழும்பில் அமைந்­துள்ள நவ சம­ச­மாஜ கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ அண்­மையில் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்குச் சென்று ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட விவ­கா­ரத்தில் குற்­ற­வா­ளி­க­ளாக கைதா­கி­யுள்ள 5 இரா­ணுவ வீரர்­களை சந்­தித்­துள்ளார்.

இவர்கள் இர­ாணுவப் புல­னாய்வு பிரிவில் கட­மை­யாற்­றி­ய­வர்கள் என்­ப­தோடு இவர் கள் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் தற்போது பொலி­ஸாரால் முன்­னெ­டுக்­கப்பட்டு வரு­கின்ற நிலையில் கடந்த அர­சாங்­கத்தின் காலத்­தி­லேயே இந்தக் கொலை இடம் பெற்­றுள்­ள­மை­யினால் கொலையின் பின்­பு­லத்தில் அர­சியல் கார­ணிகள் இருக்­கலாம் என்ற சந்தேகங்களும் நில­வு­கின் ­றன.

இவ்­வா­றி­ருக்க முன்னாள் ஜனா­தி­பதி, அவர்கள் மீது அனு­தாபம் காட்டி அவர்­களை சென்று பார்­வை­யிட வேண்­டிய அவ­சியம் என்ன என்ற சந்­தேகம் எமக்கு தோன்­றி­யுள்­ளது.

எமது பார்­வையில் இந்தக் கொலையின் மிக முக்­கிய சூத்­தி­ர­தாரி மஹிந்த தான் என்­பதை அவரே நிரூ­பித்­துக்­கொண்­டுள்ளார் என்பது விளங்­கு­கின்­றது.

அவர் தாம் நாட்டை காப்­பாற்­றிய இரா­ணுவ வீரர்கள் சிறை யில் வாடு­வ­தை­யிட்டு கவ­லை­ய­டை­வதால் அவர்­களை பார்வை­யிட சென்றேன் என்ற பாணியில் பேசு கிறார்.

ஆனால் அவர் கள் மட்டும் எமது நாட்டை காப்­பாற்­றிய வீரர்கள் இல்லை என்­பதை அவர் கவ­னத்தில் கொள்ள வேண் டும்.

ஆயி­ரக்­க­ணக்­கி­லான இரா­ணுவ வீரர்கள் நாட்டில் நில­விய 30 வருட யுத்­தத்திற்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்­காக போராடினர். அவர்­களை பார்­வை­யிட வேண்டும் என்ற கருணை உள்ளம் ஏன் மஹிந்­த­வுக்கு வர­வில்லை?

கைதா­கி­யுள்ள நால்­வ­ரு­டனும் உள்ள தொடர்­புதான் அவர்கள் மீது மஹிந்­த­வுக்கு கரு­ணையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த யுத்த வெற்­றியின் முக்­கிய புள்­ளி­களில் ஒருவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா. அவரை ஏன் மஹிந்த அர­சாங்கம் மோச­மான முறையில் சிறை­யி­ல­டைத்து அவரை வருத்­தி­யது? அவர் ஒரு யுத்த வெற்­றியின் முக்­கி­யஸ்தர் என்­பதும் மஹிந்­த­வுக்கு விளங்­க­வில்லை.

இவ்­வாறு செயற்­பட்­டதன் பின்பு தற்­போது இரா­ணு­வத்­தி­னரை பாது­காக்க வேண்டும் என்று பேசும் உரி­மையும் மஹிந்தவுக்கு இல்லை.

அதனால் தற்­போது அவர் எக்­னெ­லி­கொட கொலை விவகாரத்தின் கைதிகளை சென்று பார்வையிட்டது மட்டுமல்லாது அவரின் ஆதரவு அணியும் குறித்த கைதி களை பார்வையிட செல்கின்றது.

அதனால் தற்போது எக்னெலிகொட கொலைக்கு ஆணையிட்டவர் மஹிந்த தான் என்பதை அவரே ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக் கின்றார் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version