நத்தார் தினத்தினை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நத்தார் தினத்தினை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படடிருந்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு அறிவித்திருந்தார்.
இதன்படி சிறு குற்றத்திற்கான சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படடிருந்த கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.45 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டவர். இவர்களின் ஒரு பெண் கைதியும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.