உத்தர பிரதேசத்தில் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பஸ்ஸை செலுத்தி குரங்கு ஒன்று விபத்தை ஏற்படுத்தி யுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட்டில் பஸ் நிலையத்தில் பல பஸ்கள் நிறுத்தப்பட் டுள்ளன.

அப்போது ஒரு பேருந்தின் நடத்துனர் பயணிகளை அழைக்க சென்றுள்ளார். பஸ் புறப்பட்ட அரை மணிநேரம் இருந்ததால் சாரதி கடைசி இருக்கையில் படுத்து தூங்கியுள்ளார்.

அந்த நேரம் குரங்கு ஒன்று பஸ்ஸில் ஏறி சாரதியின் இருக்கையில் அமர்ந்து. பஸ்ஸின் சாவியை திருகி வாகனத்தை ஸ்டார்ட் செய்து கியரையும் போட்டது.

இதனால் பஸ் நகரத் தொடங்கியுள்ளது. தூங்கிக் கொண்டிருந்த சாரதிஎழுந்து ஓடி வந்து குரங்கை விரட்டியதும், குரங்கு உடனே பஸ்ஸில் இருந்து கீழே குதித்து ஓடிவிட்டது.

அதற்குள் அந்த பஸ் அங்கு நின்று கொண்டிருந்த மேலும் 2 பஸ்கள் மீது மோதியது. சாரதி இல்லாமல் பஸ் ஒன்று வந்ததை பார்த்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

உத்தர பிரதேசத்தில் ஒரு சில பஸ் நிலையங்களில் குரங்குகள் பெரும் தொல்லையாகவுள்ளன. வாகனங்கள் மற்றும் சி.சி.டி.வி.கேமராக்களை சேதப்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version