சென்னை:தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் டி.அருள்துமிலன், பொதுச்செயலாளர் எஸ்.மதுசூதனன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடிகர் சிம்புவால் பாடப்பட்டதாகவும், இசையமைப்பாளர் அனிருத்தால் இசையமைக்கப்பட்டதாகவும் வலைதளத்தில் சில விஷமிகளால் ‘பீப்’ பாடல் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலுக்கு சிம்பு மற்றும் அனிருத்தே காரணம் என கூறியும், அவர்களுக்கு எதிராக பல மகளிர் குழுக்களால் தமிழகம் முழுக்க ஆங்காங்கே திட்டமிட்டு பல கண்டன போராட்டங்கள் சட்டத்திற்கு விரோதமாக நடத்துவது, அவர்களது வாழ்க்கையில் ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

மேலும், இந்த ‘பீப்’ பாடல் சிம்பு, அனிருத் ஒப்புதல் இன்றி விஷமிகளால் வெளியிடப்பட்டுள்ளது என்ற விளக்கத்தையும் ஏற்காமல், அவர்கள் ஆண்கள் என்ற ஒரே காரணத்திற்காக இதுபோன்ற திட்டமிட்டு அவர்களுக்கு எதிராக புனையப்படும் செயல்கள் மிகவும் கண்டனத்திற்குரியது.

சிம்பு மற்றும் அனிருத் ஆகியோருக்கு எதிராக சட்டத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version