ஜோகனெஸ்பர்க்: நம் நாட்டில் தனியாக நடந்துசெல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல்வேறு மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக காரில் வந்த மூன்று பெண்கள் ஒரு வாலிரை கடத்திச் சென்று அவருடைய விருப்பத்துக்கு மாறாக பலவந்தப்படுத்தி, உறவில் ஈடுபட்டதுடன் அவரது விந்தணுவை ஒரு பிளாஸ்டிக் உறையில் சேகரித்து, ஐஸ் பெட்டிக்குள் பாதுகாத்து கொண்டுசென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு வளைகுடா பகுதியில் உள்ள போர்ட் எலிசபெத் நகரைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் இங்குள்ள குவாசாகேலே பகுதியின் சாலை வழியாக தனது சென்று காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு கருப்புநிற பி.எம்.டபிள்யூ. கார் அவர்மீது மோதுவதுபோல் அருகில்வந்து நின்றது.
அந்த காரில் இருந்து இறங்கிய மூன்று பெண்கள், அருகாமையில் உள்ள ஒரு பகுதிக்கு வழி கேட்பதுபோல் பாசாங்கு செய்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை குண்டுக்கட்டாக தூக்கி தங்களது காரினுள் போட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
போகும் வழியில் காரில் இருந்த மூன்று பெண்களும் அவருடன் உல்லாசத்தில் ஈடுபட முயன்றனர். இதற்கு அவர் ஒத்துழைக்காத நிலையில் ஏதோ ஒருவகை பானத்தை அவரது வாயில் ஊற்றி, அவரை போதையில் ஆழ்த்திய அவர்கள் மூவரும் அடுத்தடுத்து அந்நபருடன் உறவில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், அந்நபரின் விந்தணுவை ஒரு பிளாஸ்டிக் உறையில் சேகரித்து, ஐஸ் பெட்டிக்குள் பாதுகாத்து எடுத்துகொண்ட அந்தப் பெண்கள், அவரை தங்களது காரில் ஏற்றிய இடத்தில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஓரிடத்தில் காரைவிட்டு கீழே உருட்டித் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகார்தாரர் இன்னும் பீதி தெளியாத நிலையில் இருப்பதாகவும், இதுபோன்றதொரு சம்பவத்தை இதுவரை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும் அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான செய்திகள் வெளியானபின்னர் பல்வேறு தரப்பினர் வெவ்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்தப் பெண்கள் மிதமிஞ்சிய போதையில் இருந்திருக்கலாம். குறும்புத்தனமாக இதை செய்திருக்கலாம் என ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
மூவரும் ஓரினச்சேர்க்கை பிரியர்களாக இருந்து ஆணின் விந்தணுவின் மூலம் கருத்தரித்து, குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என மற்றொரு தரப்பினர் கருதுகின்றனர்.
கடத்தப்பட்ட வாலிபர் பெரும் கோடீஸ்வரராக இருக்கலாம். இந்த விந்தணுவை வைத்து எதிர்காலத்தில் அவரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் அந்தப் பெண்கள் இந்த காரியத்தை செய்திருக்கலாம் என வேறொரு தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.