kathal1பிரதான வீதியிலிருந்து பல கிலோமீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியிலேயே எம்பிலிப்பிட்டி காணப்படுகின்றது.

எனவே, இவர்கள் இருவரும் அன்று ஏன் அப்பகுதிக்கு செல்ல வேண்டும்? இவர்களை யார்? எதற்காக கொலை செய்ய வேண்டும் என்பன இன்று வரை மர்மமாகவே உள்ளன

பவிதா 18 வயது இளம் பெண். எம்­பி­லிப்­பிட்­டிய பொலிஸ்­ பி­ரி­வுக்­குட்­பட்ட நவ­த­கல , அலி­க­ஹே­ன­வத்த என்ற பிரதேசத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்­டவள்.

குடும்­பத்தின் மூத்­த­வ­ளான இவ­ளுக்கு ஒரு சகோ­தரி மட்­டுமே. அம்­ப­லாங்­கொ­டை­யி­லுள்ள பிர­பல பாட­சா­லையில் உயர்­தர உயி­ரியல் பிரிவில் கல்வி பயின்ற பவிதா கல்­வியில் மிகுந்த கெட்­டிக்­காரி.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது கல்­விப்­பொ­துத்­த­ர­ாதர உயர்­த­ரப்­ப­ரீட்­சையை எதிர்­நோக்­கி­யி­ருந்த நிலையில் படிப்பில் முழு­மூச்­சோடு ஈடு­பட்டாள்.

இத­னி­டையே தான் கடந்த ஆறு மாதங்­க­ளுக்கு முன்பு அயல் வீட்டில் வசிக்கும் 24 வயது இளைஞன் நவீன் மீது காதல் கொண்டாள் (பெயர்கள் மாற்­றப்­பட்­டுள்­ளன.)

நவீன் மன்னார் பகு­தி­யி­லுள்ள இரா­ணுவ முகாமில் பணி­பு­ரிந்து வந்தான். நவீன், பவிதா ஆகிய இரு­வ­ரி­னதும் காதல் விவ­காரம் இரு வீட்­டா­ருக்கும் தெரிய வர அவர்­களும் அக்­காதல் விவ­கா­ரத்­துக்கு பச்சைக் கொடி­காட்­டினர்.

எனவே, இரு­வரும் எவ்­வித கட்­டுப்­பா­டு­களும் இன்றி காதல் வானில் சிற­க­டித்து பறந்­தார்கள். பவிதா காதல் வயப்பட்டாலும் கல்வி நட­வ­டிக்­கை­களில் எவ்­வித பின்­ன­டை­வி­னையும் சந்­திக்­க­வில்லை.

பாட­சாலை கல்­விக்கு மேல­தி­க­மாக உயர்­தர உயி­ரியல் பாடங்­க­ளுக்கு அம்­ப­லாங்­கொ­டை­யி­லுள்ள தனியார் வகுப்புக்கும் சென்று வந்தாள். வழ­மை­யாக சனிக்­கி­ழமை நாட்­க­ளி­லேயே தனியார் வகுப்­புகள் நடை­பெற்­றன.

எனினும் தற்­போது பாட­சாலை விடு­முறை என்­பதால் வெள்ளிக்கிழமை நாட்­க­ளிலும் வகுப்­புகள் நடை­பெற்­று­வந்­தன. எனவே, தனியார் வகுப்­பு­க­ளுக்­காக வீட்­டி­லி­ருந்து அதி­காலை 6 மணி­ய­ளவில் சென்றால் மீண்டும் மாலை 6 மணியளவிலேயே வீடு வந்து சேர்வாள்.

பஸ் குருந்­து­க­ஹ­தம்ம நகரை அண்­மிக்கும் தரு­வாயில் தனது தந்­தைக்கு தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்தி தான் இருக்கும் இடத்தை தெரி­யப்­ப­டுத்­துவாள். தந்­தையும் சரி­யாக அந்த நேரத்தில் அங்கு வந்து நிற்பார். அதன்பின் வீடு வரை தந்தை அழைத்துச் செல்வார்.

இது இவ்­வாறு இருக்க கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை வழ­மைபோல் தனியார் வகுப்­புக்­காக காலை 6.30 மணிக்கும் 7.30 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் புத்­த­கப்­பை­யையும், தாய் சமைத்த உண­வி­னையும் எடுத்­துக்­கொண்டு வீட்­டி­லி­ருந்து புறப்­பட்டாள். இதன்­போது தனது கைய­டக்க தொலை­பே­சியை எடுத்துச் செல்­லவும் அவள் தவ­ற­வில்லை.

அதன்பின் காலை 11.30 மணி­ய­ளவில் பவி­தாவின் சகோ­தரி அவ­ளு­டைய தொலை­பேசி இலக்­கத்­துக்கு அழைப்பை ஏற்படுத்­திய போது வழ­மைக்கு மாறாக தொலை­பேசி நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

வழ­மை­யாக பவிதா வகுப்பில் இருக்கும் நேரங்­களில் கைபேசியை ‘சைலன்டில்’ (Silent Mode) போட்டு தான் வைத்திருப்பாள்.

எக்­கா­ரணம் கொண்டும் நிறுத்தி வைத்­தி­ருப்­பது கிடை­யாது. எனினும் அன்று தொலை­பேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அவ­ளு­டைய சகோ­த­ரிக்கு சற்று சந்­தே­கத்தை உண்­டு­பண்­ணி­யது.. எனவே சகோ­தரி சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பை ஏற்­ப­டுத்தி பார்ப்போம் என்று இருந்­து­விட்டாள்.

பக­லு­ணவு வேளை வரும் வரை காத்­தி­ருந்த அவள் மீண்டும் பவி­தாவின் தொலை­பேசி இலக்­கத்­துக்கு அழைப்பை ஏற்படுத்­தினாள்.

எனினும், அச்­சந்­தர்ப்­பத்­திலும் அவ­ளு­டைய தொலை­பேசி நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. எனவே, தாயிடம் சென்று ” அம்மா என்ன காரணம் என்று தெரி­ய­வில்லை.

அக்­காவின் தொலை­பேசி நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. நாங்கள் நவீன் அண்­ணா­விடம் கேட்டுப் பார்ப்போம்” என்று கூறினாள். அதற்கு தாயும் சம்­ம­தித்தாள்.

அதன்­படி இரு­வரும் சேர்ந்து பவி­தாவின் காத­லான நவீ­னுக்கு தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்­தி­னார்கள். எனினும், அந்த தொலை­பேசி அழைப்­பு­க­ளுக்கு நவீன் பதி­ல­ளிக்­க­வில்லை.

இவ்­வாறு மிக நீண்ட நேர­மாக இரு­வரின் தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கும் அழைப்பை ஏற்­ப­டுத்­திய வண்ணம் இருந்­தார்கள்.

ஆயினும், தொடர்ந்து நவீன் தொலை­பேசி அழைப்­பு­க­ளுக்கு பதி­ல­ளிக்­காத நிலை­யிலும், பவி­தாவின் தொலை­பேசி நிறுத்­தப்­பட்டும் இருந்­தன. எனவே நேரம் செல்ல செல்ல இது பவி­தாவின் குடும்­பத்­தினர் மத்­தியில் குழப்­பத்தை ஏற்படுத்­தி­யது. ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய எண்ண அலை­களும் பல­வாறு சிந்­தித்­தன.

பவிதா நவீ­னுடன் வீட்டை விட்டு தப்பிச் சென்­று­விட்­டாளா?, இதனால் தான் பவி­தாவின் தொலை­பேசி நிறுத்தப்பட்டிருக்­கின்­றதா?, பவிதா தன்­னுடன் இருப்­பதால் தான் நவீன் தொலை­பேசி அழைப்­பு­க­ளுக்கு பதி­ல­ளிக்­காமல் இருக்­கின்­றானா? என்­றெல்லாம் பல­வாறு சிந்­தித்­தனர்.

எனவே, அவர்­க­ளுக்குள் எழுந்த சந்­தே­கத்தை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ளும் முக­மாக நவீனின் வீட்டை நோக்கிச் சென்றார்கள்.

எனினும், அங்கும் நிலைமை தலை கீழா­கவே இருந்­தது. நவீனை காண­வில்லை என்ற பதட்­டத்தில் ஆளுக்­கொரு பக்கம் புலம்­பிக்­கொண்­டி­ருந்­தார்கள்.

காலை 10.30 மணி­யவில் நண்­ப­ரொ­ரு­வரை சந்­தித்து வரு­கின்றேன். என்­று­கூறி மோட்டார் சைக்­கிளில் வீட்­டி­லி­ருந்து புறப்­பட்டு சென்ற நவீன் இன்னும் வீட்­டுக்கு வர­வில்லை என்றும், அவ­னு­டைய தொலை­பேசி இலக்­கத்­துக்கு அழைப்பை ஏற்­ப­டுத்­தினால் அவன் அதற்கு பதி­ல­ளிக்க தவ­று­கின்றான் என்றும் நவீனின் குடும்­பத்­தினர் கூறி­னார்கள்.

மிக நீண்ட யோச­னையின் பின் இரு குடும்­பத்­தி­னரும் இருவர் தொடர்­பா­கவும் தேடிப் பார்ப்போம் என்ற முடி­வுக்கு வந்தனர்.

இதன்­போது பவி­தாவின் சகோ­தர முறை­யி­லான பியந்த தொடர்ந்து இரு­வ­ரி­னதும் தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு அழைப்பை ஏற்­ப­டுத்­தி­ய­வாறே இருந்தார்.

அது­மட்­டு­மின்றி இரு­வ­ரு­டைய தொலை­பேசி .இலக்­கத்­துக்கும் “உங்கள் இரு­வ­ரையும் காணாது நாங்கள் பயத்தில் இருக்­கின்றோம்.

தயவு செய்து எங்­க­ளுக்கு ‘கோல்’ ஒன்று எடுங்கள்” என்று குறுங்­த­க­வ­லொன்­றையும் அனுப்பி வைத்தார். ஆயினும் அதற்கும் இரு­வ­ரி­ட­மி­ருந்தும் எந்­த­வித பதிலும் வர­வில்லை.

அதனைத் தொடர்ந்து அம்­ப­லாங்­கொ­டை­யி­லி­ருந்து மாலை 6.00 மணிக்கும் 8.00 மணிக்கும் இடைப்­பட்ட காலப்­பகுதியில் குருந்துகஹதம்ம நகரை நோக்­கி­வரும் சகல பஸ் வண்­டி­க­ளிலும் ஏறி பவிதா தொடர்­பாக தேடிப் பார்த்­தார்கள். எனினும் அங்கும் ஏமாற்றம் மட்­டுமே மிஞ்­சி­யி­ருந்­தது.

ஏமாற்­றத்­துடன் இரவு 8 மணி­ய­ளவில் வீட்­டுக்கு வந்­த­டைந்­த­வர்­க­ளுக்கு. அதற்­கு­பி­றகு என்ன செய்­வது? என்று ஒன்றுமே புரி­ய­வில்லை.

இந்த நிலையில் தான் இனி­மேலும் பொறுக்­க­மு­டி­யாது என்று பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று முறைப்­பாடு ஒன்றினை பதிவு செய்வோம் என்ற முடி­வுக்கு வந்­தனர்.

அதன்­படி எம்­பி­லிப்­பிட்டி பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று பவி­தாவின் தாய் தனியார் வகுப்­புக்­காக வீட்­டி­லி­ருந்து சென்ற மகள் இன்னும் வீடு திரும்­ப­வில்­லை­யென்றும், நவீனின் தந்தை காலை 10.30 மணி­ய­ளவில் நண்­ப­ரொ­ரு­வரை சந்­தித்து வரு­வ­தாகக் கூறி மோட்டார் சைக்­கிளில் சென்ற மகன் இன்னும் வீட்­டுக்கு வர­வில்­லை­யென்றும் வெவ்­வேறு முறைப்­பா­டு­களை பதிவு செய்­தார்கள்.

கிடைத்த முறைப்­பா­டு­க­ளுக்கு அமைய எம்­பி­லி­பிட்­டிய பொலிஸார் தமது விசா­ர­ணை­களை துரி­த­மாக ஆரம்­பித்­தார்கள். அது­மட்­டு­மின்றி, இரு­வ­ரி­னதும், நண்­பர்கள்,உற­வி­னர்கள் என்று அனை­வரும் தங்­களால் முடிந்த அளவில் இரு­வ­ரையும் தேடி அலைந்து திரிந்­தார்கள்.

ஆயினும், அவர்­க­ளு­டைய முயற்­சிக்கு எந்­த­வித பலனும் கிடைக்­க­வில்லை.. அதற்­கு­பி­றகு அடுத்த நாள் காலை 11.00 மணி­ய­ளவில் பவி­தாவின் வீட்­டுக்கு வந்த எம்­பி­லி­பிட்­டிய பொலிஸ் நிலைய அதி­கா­ரிகள் பவி­தாவின் குடும்பத்தவர்களி­ட­மி­ருந்து வாக்­கு­மூ­லங்­களைப் பெற்­றுக்­கொண்­ட­துடன், இருவர் தொடர்­பாக இது­வரை எந்­த­வித தகவல்­களும் கிடைக்­க­வில்­லை­யென்றும், இது­தொ­டர்­பாக அயல் பிர­தேச பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் தாம் அறி­வித்துள்­ள­தா­கவும் கூறிச்­சென்­றனர்.

மேலும் அவர்கள் இரு­வரும் திரு­மணம் செய்­து­கொள்ளும் நோக்கில் தான் எங்கோ தப்­பிச்­சென்­றி­ருக்க வேண்டும். அவர்­களை தேடிக்கண்டுப் பிடித்து திரு­மணம் செய்து வையுங்கள் என்றும் இரு­வீட்­டா­ருக்கும் பொலிஸார் அறி­வு­ரை­களை வழங்­கினர்.

இத­னி­டையே எல்­பிட்­டிய நீர்­வீழ்ச்­சிக்கு செல்லும் வழி­யி­லுள்ள வாக­னங்கள் நிறுத்தும் இடத்தில் கைவி­டப்­பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­தது.

அதற்­க­மைய குறித்த மோட்டார் சைக்­கிளை கைப்­பற்­றிய பொலிஸார் மோட்டார் சைக்­கிளின் இலக்­கத்தின் ஊடாக அதன் உரி­மை­யா­ளரை கண்­டு­பி­டிக்க விழைந்­தனர்.

எனினும் அநா­த­ர­வாக கிடந்த குறித்த மோட்டார் சைக்­கி­ளுக்கும், நவீன், பவிதா தலை­ம­றை­வுக்கும் இடையில் ஏதேனும் தொடர்­புகள் இருக்­குமா? என்­பது தொடர்பில் ஆரம்­பத்தில் பொலிஸார் சந்­தே­கிக்க தவ­றி­விட்­டனர். எனவே தான் எல்பிட்டிய பொலிஸார் இது தொடர்­பாக நவீனின் பெற்­றோ­ருக்கு அறி­விக்­க­வில்லை..

எனினும், எல்­பிட்­டிய நீர்­வீழ்ச்­சிக்கு அரு­கி­லி­ருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது என்­பதை எப்­ப­டியோ அறிந்­து­கொண்ட நவீனின் வீட்டார் தம்மை நீர்­வீழ்ச்­சிக்கு அருகில் அழைத்துச் செல்­லு­மாறு பொலி­ஸா­ருக்கு வேண்டுகோள் விடுத்­தனர்.

அதன்­பின்­னரே 13 ஆம் திகதி இரு வீட்­டாரும் பொலி­ஸா­ருடன் இணைந்து எல்­பிட்­டிய நீர்­வீழ்ச்­சிக்கு அருகில் சென்று தேடு­தலை மேற்­கொண்­டனர்.

இதன்­போதே எல்­பிட்­டிய நீர்­வீழ்ச்­சிக்கு அரு­கி­லி­ருந்து 48 மீற்றர் தூரத்­தி­லுள்ள காட்­டுப்­ப­கு­தியில் சிதை­வுற்ற நிலையில், அரை­கு­றை­யான ஆடை­க­ளுடன் பவி­தாவின் சடலம் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

அது­மட்­டு­மின்றி, பவி­தாவின் சடலம் கிடந்த இடத்­தி­லி­ருந்து சற்று தொலைவில் நவீனின் சட­லமும் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் சட­லங்கள் காணப்­பட்ட அயல் பகு­தி­களை சோத­னைக்­குட்­ப­டுத்­திய போது அதிக விஷ தன்­மை­கூ­டிய வெற்றுக்கி­ரு­மி­நா­சினி போத்­த­லொன்று கண்­டெ­டுக்­கப்­பட்­ட­துடன், நஞ்­ச­ருந்தி வாந்தி எடுத்­தி­ருப்­ப­தற்­கான அறி­குறிகளும் ஆங்­காங்கே காணப்­பட்­டன.

எனவே, இவற்றை உன்­னிப்­பாக அவ­தா­னித்த பொலிஸார் இவர்கள் இரு­வரும் நஞ்­ச­ருந்­தியே தற்­கொ­லைக்கு முயற்­சித்­தி­ருக்க வேண்டும் என்ற அனு­மா­னத்­துக்கு வந்­தனர்.

இதனைத் தொடர்ந்து மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக சம்­பவ இடத்­துக்கு வந்த எல்­பிட்­டிய நீதவான் சட­லங்­களை பார்­வை­யிட்ட போது பவி­தாவின் சடலம் டவல் ஒன்­றினால் போர்த்­தப்­பட்­டி­ருந்­தது.. எனவே, அவற்றை விலக்கி பார்த்த போது அவ­ளு­டைய கீழ் உள்­ளா­டையை யாரோ கழற்றி மீண்டும் போடு­வ­தற்கு முயற்சி செய்­தி­ருப்­பது தெரி­ய­வந்­தது.

மேலும் இச்­சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலி­ஸா­ருக்கு உயி­ரி­ழந்த நவீனின் நண்பன் கருத்து தெரி­வித்­தி­ருக்­கையில் “நான் மிகுந்த பயத்­துடன் இருக்­கின்றேன்.

உடனே எனது தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்புகொள்” என்று நவீன் தனக்கு குறுங்­த­க­வ­லொன்­றினை அனுப்பியிருந்­த­தா­கவும் அதற்கு பிறகு தான் அழைப்பை ஏற்­ப­டுத்­திய போது அவ­னு­டைய தொலை­பேசி நிறுத்திவைக்கப்பட்டிருந்தா­கவும் தெரிவித்திருந்தார்.

அதன்­பி­றகு பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்­காக எல்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லைக்கு சட­லங்கள் இரண்டும் எடுத்துச் செல்லப்பட்டன.

அதன்­படி இருவரும் தற்­கொலை செய்­து­கொள்­ள­வில்­லை­யென்றும் , திட்­ட­மி­டப்­பட்ட வகையில் கொலை செய்யப்பட்டிருப்­ப­தா­கவும் அதன்­மு­டி­வுகள் அறி­வித்­தன.

பவிதா தலையில் ஆயுதமொன்றினால் பலமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், இறு­தி­யாக பாலியல் ரீதி­யான செயற்­பா­டு­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தற்­கான வாய்ப்­புகள் இருந்­துள்­ள­தா­கவும் அவ்­வ­றிக்­கையில் சுட்டிக்காட்டப்பட்­டி­ருந்­தது. மேலும் நவீன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிர­தான வீதி­யி­லி­ருந்து பல கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள காட்­டுப்­ப­கு­தி­யி­லேயே எம்­பி­லிப்­பிட்டி நீர்­வீழ்ச்சி காணப்படு­கின்­றது.

எனவே இவர்கள் இரு­வரும் அன்று ஏன் அப்­ப­கு­திக்கு செல்ல வேண்டும் ? இவர்­களை யார்? எதற்­காக கொலை செய்ய வேண்டும் என்­பன இன்று வரை மர்­ம­மா­கவே உள்­ளன.

இந்­நி­லையில் குறித்த சம்­பவம் தொடர்பில் போதிய சாட்சியங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளன.

அதுமட்டுமின்றி, இருவரும் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தினத்தன்று இருவரையும் பொது இடங்களில் கண்டதாக கூறப்படும் சாட்சியங்களிலும் முரண்பாடுகள் நிறைந்ததாகவே காணப்படுகின்றன.

இந்நிலையில் மேலதிக பரிசோதனைகளுக்காக இருவரினதும் சடலங்களிலிருந்து பெறப்பட்ட உடற் கூறுகள் ஜின்.டெக். நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

எதுஎவ்வாறாயினும், இயற்கையின் குளிர்ச்சியும் அழகும் ஒன்றாக சேரப்பெற்ற நீர்வீழ்ச்சிக்கு அருகில் இக்காதலர்களின் மரணமானது இதயத்தை கதி கலங்க வைக்கின்றது.. எனவே, குறித்த கொலையுடன் தொடர்புடைய உண்மைகள் விரைவில் துலங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட உறவினர்களின் எதிர்பார்ப்பாகும்.

(2015.12.24 திகதி வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்)

ஹெல்பிடிய இளம் காதல் ஜோடியின் மரணம்: கொலை என உறுதி!!

Share.
Leave A Reply

Exit mobile version