கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த விபத்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நாவலப்பிட்டி கலபொட புகையிரத நிலையத்திற்கும் தெஹிந்த புகையிரத நிலையத்திற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் புகையிரத நிலைய உத்தியோகத்தரிடம் அவரது சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை அறிந்த ஹட்டன் பொலிஸார் இளைஞரின் சடலத்தினை பொறுப்பேற்றுள்ளனர்.

எனினும் உயிரிழந்தவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கும் பொலிஸார் இவர் 25 வயது மதிக்கதக்கவர் என தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1376123565Train

Share.
Leave A Reply

Exit mobile version