டெல்லி: 2016ம் ஆண்டு எப்படி இருக்கும்.. உலகெங்கும் எதிர்பார்ப்புகள் இப்போதே இறக்கை கட்டி கிளம்பி விட்டன. இந்த நிலையில் அந்தக் காலத்து பிரெஞ்சு ஞானி நாஸ்டிரடாமஸ் இந்த நூற்றாண்டுக்காக கணித்துள்ள தகவல்கள் வெளியாகி புதுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நாஸ்டிரடாமஸ் கணித்துள்ளவற்றில் முக்கியமானது, 3வது உலகப் போர் வெடிக்கும் என்பதுதான். இந்த உலகப் போர் உலக அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் பாதி உலகம் அழியும் என்றும் நாஸ்டிரடாமஸின் கணிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளதாம். வாங்க அதுகுறித்து பார்க்கலாம்…28-1451299550-21-1442811052-nostradamus-600-jpg
புதிய சக்தியின் பிறப்பு
உலகில் புதிதாக ஒரு சக்திவாய்ந்த நபர் உருவெடுப்பாராம். இவர் கிறிஸ்தவத்திற்கு எதிரானவராக இருப்பாராம். மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோரின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவாராம். இவரால் சீனா, ரஷ்யாவுக்கு பெரும் சிக்கல் நேருமாம்.
ஆசியாவுக்கு ஆபத்து
இந்த புதிய தலைவரால் ஆசிய நாடுகளுக்கே பேராபத்து ஏற்படுமாம். ஆசிய நாடுகளை தன் வயப்படுத்த இவர் முனைவாராம். அதில் வெற்றியும் கிட்டுமாம். மேலும் உலக நாடுகளையும் இவர் அடிமைப்படுத்த தொடங்குவாராம்.
போர் மூளும்
இந்தத் தலைவரால் கிறிஸ்தவ மதம் சிதையத் தொடங்குமாம். மேலும் இஸ்லாமுக்கும் எதிரானவராக இவர் இருப்பாராம். மதங்களே இல்லாத நிலையை உருவாக்குவதே இவரது திட்டமாக இருக்குமாம். ஹிட்லரைப் போல இவர் செயல்படுவாராம்.
எதிர்க்க ஆளே இருக்காது
இந்தத் தலைவரின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்குமாம். உலக நாடுகள் இவரை எதிர்க்க முடியாமல் திணறிப் பின்வாங்குமாம். தன்னை எதிர்ப்போரை பின்னுக்குத் தள்ளி இவர் மேலே வந்து விடுவாராம்.
புதிய போப்பாண்டவர் வருவார்.. அவரே கடைசி!
இந்த நூற்றாண்டில் கடைசியாக தேர்ந்தெடுக்கப்படும் போப்பாண்டவர் பிரெஞ்சுக்காரராக இருப்பாராம். அவருக்கு நீல நிற கண்கள் இருக்குமாம். அவர் ஒரு மர்மம் நிறைந்த மனிதராகவும் இருப்பாராம். உடல் ரீதியில் அவர் சில குறைகளைக் கொண்டவராகவும் இருப்பாராம். அவரது தேர்வுக்கு முன்னதாக பழம்பெரும் ரோமன் கல்லறை ஒன்று கண்டெடுக்கப்படுமாம்.
மாபெரும் வெள்ளம் வரும்
கத்தோலிக்க மதத்தின் வீழ்ச்சியின் தொடர்ச்சியாக வரலாற்றில் கண்டிராத மிகப் பெரிய வெள்ளம் ஏற்படுமாம். இயற்கை பேரிடர்கள் மிகப் பெரிய அளவில் வெடிக்குமாம். பல பேரழிவுகளை உலகம் காணுமாம். நிலத்தின் பெரும் பகுதி இதில் சிக்கி அழியுமாம். வானிலிருந்து வரும் சக்தியால் பூமியின் பல பகுதிகளில் அழிவு ஏற்படுமாம்.

ஐரோப்பாவில் இஸ்லாம்
உலகை ஆட்டிப் படைக்கப் போகும் இந்த புதிய சக்தியானது (தலைவர்) ஐரோப்பாவை வெகு விரைவில் தனது கட்டுக்குள் கொண்டு வந்து விடுவாராம். அவரது தலைமையிலான அமைப்பும் மிகப் பெரிதாக வலுவடைந்து விடுமாம்.
தலைவர்களின் தலைகள் உருளும்
இந்த அமைப்பு மற்றும் தலைவரின் ஆதிக்கம் வலுப்பெறுவதால் பல உலகத் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவார்களாம். பலரை இந்தத் தலைவரே கொல்வாராம்.
மறைமுக அரசுகள்
இந்த தலைவர் மற்றும் அமைப்பு ஆகியோர், பல ஆசிய நாடுகளில் தங்களது பொம்மை அரசுகளை அமைப்பார்களாம். இவர்களது பொம்மை தலைவர்கள் என்பதை அமெரிக்காவால் கூட கண்டுபிடிக்க முடியாதாம். ஆனால் ஒரு நாள் மொத்தமாக அத்தனை அரசுகளும் இவர்களுடையது என்று தெரிய வந்து உலகம் அதிருமாம்.
ரஷ்யாவைக் கைப்பற்றுவார்
இந்தத் தலைவர் ரஷ்யாவை மிகவும் தந்திரமாக ஏமாற்றி கைப்பற்றி ஆட்சி அமைப்பாராம். ஒட்டுமொத்த ரஷ்யாவையும் இவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவாராம். அதேபோல சீனாவையும் தனது கட்டுக்குள் கொண்டு வருவாராம். ஆனால் ரஷ்யாவைப் போல சீனாவில் செய்யாமல் வேறு உத்தியில் அதைச் சாதிப்பாராம்.
எரிமலை குமுறும், பூகம்பம் வெடிக்கும், வறட்சி கொக்கரிக்கும்
2016ம் ஆண்டில் உலகம் மிகப் பெரிய பல பேரழிவுகளையும் சந்திக்குமாம். அதாவது எரிமலைகள் வெடிக்குமாம், நிலநடுக்கம் அதிகரிக்குமாம், வெள்ளம் அதிகளவில் ஏற்படும். வறட்சி, பஞ்சம் அதிகரிக்குமாம். கலவரங்களும் அதிகரிக்குமாம்.
பூமியே மாறிப் போகும்
புதிய சக்தியின் தாக்கம் காரணமாக பூமியின் இயல்பே மாறிப் போகுமாம். அதாவது மத்திய ஐரோப்பா, தெற்கு ஐரோப்பா, வட கிழக்கு ஐரோப்பா, மத்தியத் தரைக் கடல் நாடுகளில் மிகப் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படுமாம். பல நாடுகளில் அரசுகள் கவிழுமாம்.
மிகப் பெரிய தலைவர் கொல்லப்படுவார்
இந்த ஆண்டில் மிகப் பெரிய உலகத் தலைவர் ஒருவர் கொல்லப்படுவாராம். அவர் மத்திய கிழக்கு நாட்டில் கொல்லப்படுவாராம். அவர் கொல்லப்படும் சமயத்தில் ஒரு பெரிய வால் நட்சத்திரம் வெறும் கண்ணில் பார்க்கும் அளவுக்கு தெளிவாக காட்சி தருமாம். பல நாட்கள் அந்த வால் நட்சத்திரத்தைப் பார்க்க முடியுமாம். பின்னர் அது வெடித்துச் சிதறி விடுமாம். Show Thumbnail
புதிய இளம் தலைவர் உருவெடுப்பார்
வரும் ஆண்டுகளில் உலக நாடு ஒன்றில் புதிய இளம் தலைவர் உருவெடுப்பார். அவர் கருப்பாக இருப்பார். அவர் மூன்றாம் உலக நாடுகளை ஒருங்கிணைத்து வல்லரசு நாடுகளுடன் மோதுவார். இந்தப் போர் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் நடைபெறும். இதில் யாருக்கும் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்காது.
3ம் உலகப் போர் வெடிக்கும்
இந்த நூற்றாண்டில் 3ம் உலகப் போர் வெடிக்கும். இதுவரை உலகம் பார்த்திராத பல வித்தியாசமான ஆயுதங்கள் இதில் பயன்படுத்தப்படும். இந்தப் போரின் தாக்கத்தால் உலகின் பெரும் பகுதி பாதிக்கப்படும்.
புதிய சக்தி வீழ்ச்சி அடையும்
முதலில் சொன்ன புதிய சக்தியானது, அதி வேகத்தில் பல நாடுகளையும் சிறை பிடித்து உலகை தன் கட்டுக்குள் கொண்டு வந்தாலும் கூட அது சீக்கிரமே அழிந்து போய் விடுமாம். ஆனால் அந்தப் புதிய சக்தி, தலைவர், அமைப்பின் தாக்கம் பல காலத்திற்கு உலக நாடுகளில் நீடிக்குமாம். பெரும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.. பார்க்கலாம்.
Share.
Leave A Reply

Exit mobile version