கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரகாபொல பிரதேசத்தில், தும்மலதெனிய எனும் இடத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பாந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்றும் பொலன்னறுவை, சோமாவதிய நோக்கி சென்ற பஸ் ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.
மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை உட்பட சாரதி ஆகிய ஐவர் இந்த விபத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் வரகாபொல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.