இறால் அதிகமாக பிடிக்கப்படும் இக்காலப்பகுதியில் இந்திய இழுவைப்படகுகள் தடைசெய்யப்பட்ட வலைகளை கொண்டு வடபகுதி கடல்பரப்பில் மீன்பிடிப்பதால் எமது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள், இதை சட்டரீதியாக தடுக்கவில்லை என்றால் இந்திய மீனவர்களை அடித்து துரத்துவோம் என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று வடமாகாணசபையில் தெரிவித்தார்.

வடமாகாணசபை கூட்டம் இன்று ஆரம்பமான போது மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் இந்திய மீனவர்களாலும் தென்னிலங்கை மீனவர்களாலும் வடபகுதி தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படும் விடயத்தை சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்திய மீனவர்களால் எமது கடல்வளம் முற்றாக அழிக்கப்படுகிறது. இதை தடுக்கவில்லை என்றால் எமது மீனவர்கள் வாழ்வாதாரமும் எமது பிரதேச பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்பதற்காக பொறுமையாக இருக்கிறோம். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் விளைவு பாரதூரமானதாக இருக்கும் என்றும் ரவிகரன் எச்சரிக்கை விடுத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version