அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள ‘லாரி ஸ்வெட்பெர்க்’ என்ற ஒரு பெண் 35 வருடங்களாக ஒவ்வொரு கல்லாக இழைத்து இழைத்து ஒரு இயற்கை வீட்டை உருவாக்கியுள்ளார்.

இந்த வீட்டைக் கட்டுவதற்காக செயற்கையான எந்தப் பொருளையும் உபயோகிக்காமல் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை சேகரித்து ‘க்ளோ கன்’ எனப்படும் பசை ஒட்டும் இயந்திரத்தின் உதவியுடன் ஒவ்வொன்றாக ஒட்டி இந்த வீட்டை உருவாக்கியுள்ளார்.

என்றாலும் இவ்வளவு சிரமப்பட்டு கட்டிய வீட்டில் வசிக்கப் போவதில்லை என அறிவித்துள்ள அந்த பெண், தனது ஓய்வுக் காலத்தை கலிபோர்னியாவில் கழிக்க இருப்பதாகவும், இந்த வீட்டை 149,000 டாலருக்கு விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

022

Share.
Leave A Reply

Exit mobile version