கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ரயில் ஒன்றில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவான ராணுவ வீரர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்ட விரைவு ரயிலில் ராணுவத்தினர் 3 பேர் 14 வயது சிறுமி ஒருவருக்கு வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம், மதுப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ரயில்வே காவல்துறையினர், திரிபாதி என்ற ராணுவ வீரரை கைது செய்தனர்.

தப்பியோடிய ராணுவ வீரர்கள் பங்கஜ் குமார், பாலக்குமார் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் அசாம் மாநில விமான நிலையத்தில் இரண்டு ராணுவ வீரர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version