திருகோணமலை, கிளிவெட்டி பகுதியில் இளம் பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 25 வயதானவர் எனவும் அவர் 18 வயது பெண்ணொருவரின் கையைப்பிடித்தே இழுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குறித்த சந்தேகநபர் தண்ணீர் கேட்டுள்ளார்.
குறித்த பெண் தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்ற சமயம் குறித்த இளைஞர் பின்தொடர்ந்து சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.
பின்பு குறித்த பெண் நடந்த சம்பவத்தை பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து பெற்றோர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்