சென்னை: வெள்ளம் பாதித்த சென்னை மக்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக நடிகர் பார்த்திபன் பீப் என்ற புதிய பாடலை எழுதி, யூ டியூப்பில் வெளியிட்டுள்ளார்.
அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடல் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிம்பு மீதும், அனிருத் மீதும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காகவே நடிகர் பார்த்திபன் பீப் என்ற புதிய பாடலை உருவாக்கியுள்ளார்.
’த்துதா மித வகுதா’ என அப்பாடல் துவங்குகிறது. இப்பாடல் தொடர்பாக பார்த்திபன் கூறுகையில்,
அதே போல் சென்னையும் மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று ஒரு பாடல் உருவாக்க நினைத்தேன். அந்த பாடலை நான் எழுத சத்யா இசையமைத்தார்.
தற்போது ‘‘பீப்” பாடல் தமிழகத்தில் பரபரப்பாக இருப்பதால் இப்பாடலை ”பீபீ” என்று தொடங்குவது போல எழுதினேன்.
இந்த பாடலில் வெள்ள பாதிப்பின்போது பொது மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களை ஆட வைத்தேன். இதில் சமுத்திரக்கனி, மயில்சாமி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
துயரப் பருப்பு, கவலைப் பருப்பு என பருப்பில் புதிய வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
மக்களிடையே இருக்கும் மனித நேயத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்த பாடலின் நோக்கம்.