2015ம் ஆண்டு நிறைவுற்று புத்தாண்டு பிறந்துள்ள இந்த தருணத்தில் உலக அரசியல் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் நிகழ்ந்த சுவாரஸ்சியமான மற்றும் விசித்தரமான அனுபவங்களின் புகைப்படங்கள் தொகுப்பு இதோ!!
ஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் 2015ம் ஆண்டின் தலைச்சிறந்த மனிதராக ‘டைம்ஸ்’ பத்திரிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர்களுடன் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொள்ளும் சான்சலர் ஒரு தீவிர மீன் பிரியர் ஆவார். மே 26ம் திகதி நடந்த ஒரு கிறித்துவ ஞானஸ்நானம் நிகழ்ச்சியில் ஒரு முழு மீனை விழுங்குவது போன்ற இந்த புகைப்படம் பின்னாளில் அவரையே சிரிக்க வைத்தது.
உலக வல்லரசு தலைவர்களில் ஒருவரான விளாடிமிர் புடின் உடல் ஆரோக்கியத்தை காப்பதில் மிகுந்த அக்கறை செலுத்துவார். தனியாக நீச்சல் குளம், நவீன உடற்பயிற்சி கூடம், குதிரை சவாரி, உல்லாசப்படகில் பயணம் என நேரம் கிடைக்கும்போது தனது உடல் நலனில் மிகுந்த கவனம் செலுத்துவார். எனினும், விளாடிமிர் புடினின் இதுபோன்ற புகைப்படங்கள் வெளியாவது மிகவும் அரிது.
பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூன் இறந்த பன்றின் தலையுடன் உடலுறவுக்கொண்டார் என கடந்த செப்டம்பர் மாதம் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாராளுமன்ற உறுப்பினரான ஆஷ்க்ரோப்ட் என்பவர் ‘Call Me Dave’ என புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இதில், டேவிட் கமெரூன் கல்லூரி நாட்களில் கஞ்சா பயன்படுத்தும் ஒரு குழுவில் இடம்பெற்று இருந்ததாகவும், இறந்த பன்றியின் தலையுடன் உடலுறவில் ஈடுப்பட்டார் எனக்கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்திய பிரதமரான மோடி கடந்த நவம்பர் 13ம் திகதி பிரித்தானியாவில் உள்ள லண்டன் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகளில் இருநாடுகளின் தலைவர்கள் சந்திக்கொண்டால், மரியாதை நிமித்தமாக லேசாக கட்டியணைத்து உடனே விலகி விடுவார்கள்.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் கமெரூனை கட்டிப்பிடித்த மோடி, கமெரூனின் முதுகை இறுக்கி பிடித்துக்கொண்டு நீண்ட நேரமாக நின்றதை அந்நாட்டு பத்திரிகைகள் ‘World Champion For Embracing’(கட்டிப்பிடிப்பதில் உலகளவில் சாம்பியன் பட்டம் வென்ற மோடி) என செய்தி வெளியிட்டு கிண்டலடித்தன.
ஈரான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சரான ஜவாட் சாரிஃப் கடந்த யூலை 14ம் திகதி வியன்னாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அமெரிக்க வெளியுறவு செயலாளரான ஜோன் கெர்ரி ஏதோ கூற, பொது நிகழ்ச்சி என்றும் அறியாமல் சாரிஃப் உரக்க சிரித்த அந்த அரங்கையே நில நிமிடங்கள் அதிர்ச்சி கொள்ள செய்தார்.
உலக வல்லரசு நாடுகளில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா தவிர்க்க முடியாத நாடுகள். அதேபோல், இவ்விரு நாடுகளின் தலைவர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் 2015ம் ஆண்டில் அடிக்கடி வெளியாகின.
இவற்றில் ஹைலைட்டாக பார்க்கப்படுவது கடந்த செப்டம்பர் 28ம் திகதி பாரீஸில் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் ஒபாமா மற்றும் புடின் நேருக்கு நேராக சந்தித்துக்கொண்டனர்.
ஆனால், இருவரின் முகங்களும் இறுக்கமாக இருந்ததுடன் மட்டுமில்லாமல், ஒபாமா கை குழுக்க வந்தபோது அதனை புடின் சில வினாடிகள் நிராகரித்து நின்று இந்த புகைப்படும் அன்றைய தலைப்பு செய்தியாக மாறியது.
புடின் அவமதித்த இரண்டு தினங்களுக்கு பிறகு இதே பாரீஸ் கூட்டத்தில் செப்டம்பர் 30ம் திகதி பாலஸ்தீனிய ஜனாதிபதியான முகமது அப்பாஸிடம் கை குழுக்க ஒபாமா முயற்சி செய்ய, இதனை கவனிக்காத அப்பாஸ் கூட்டத்தினை பார்த்த கை அசைக்க, ஒபாமா சிறிது நேரம் வெறுங்கையை நீட்டிக்கொண்டு இருக்கும் நிலை ஏற்பட்டது.
ஜிம்பாப்வே ஜனாதிபதியான ரோபர்ட் முகபே கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி தனது ஆதரவாளர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
அப்போது சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட தரையில் நடந்துச்சென்ற போது திடீரென கால் இடறி கீழே விழுந்துள்ளார். எனினும், உடன் இருந்த பாதுகாப்பு வீரர்கள் அவரை உடனடியாக தூக்கி உதவி செய்துள்ளனர்.
உக்ரைன் நாட்டு பாராளுமன்றத்தில் டிசம்பர் 11ம் திகதி அந்நாட்டு பிரதமரான அர்சேனி யாட்செனியுக் என்பவர் உரை நிகழ்த்திக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது ஜனாதிபதி ஆதரவு எம்.பி ஒருவர் கூலாக நடந்து சென்று பிரதமரிடம் பூங்கொத்து ஒன்று அளித்துவிட்டு அவரை குண்டுக்கட்டாக தூக்கி வீச முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமரை பதவி விலக வலியுறுத்தியபோது இந்த தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
கடந்த பெப்ரவரி 2ம் திகதி பிரஸ்சல்ஸில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சுவிட்சர்லார்ந்து ஜனாதிபதியான சிமோனேட்டா சோமரூகாவும் ஐரோப்பிய ஆணைய தலைவருமான ஜங்கர் என்பரும் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் அருகில் இருந்த சுவிஸ் ஜனாதிபதியை ஜங்கர் மரியாதை நிமித்தமாக கட்டிப்பிடித்துள்ளார். ஆனால், ஜனாதிபதி எதிர்பாராத தருணத்தில் திடீரென அவரது கன்னத்தில் ஜங்கர் முத்தமிடுகிறார். இதனை சற்றும் எதிர்பாராத ஜனாதிபதியும் வேறுவழியின்றி அசட்டு சிரிப்புடன் அதனை ஏற்றுக்கொள்கிறார்.