நெல்லை: செங்கோட்டையில் மாயமான ஆசிரியை-மாணவர் ஜோடி புதுச்சேரியில் இருப்பதாக தெரிய வந்ததால் போலீசார் அங்கு விரைந்துளளனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை காலங்கரையை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி. இவர் அங்குள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

அப்போது கடையநல்லூர் கிருஷணாபுரத்தை சேர்ந்த சிவசுந்தரபாண்டியன் என்பவர் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ஆசிரியை சிவசுந்தரபாண்டியனுக்கு பாடம் எடுக்கும் போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இருவரும் திடீரென ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து இருவரது பெற்றோரும் போலீசில் தனி தனியாக புகார் தெரிவித்தனர். மாணவர் தரப்பு புகாரை கடையநல்லூர் போலீசார் விசாரித்து வந்தனர்.

ஜூன் மாதம் காதல் ஜோடி புதுவையில் இருப்பதாக செல்போன் டவர் காண்பித்தது. போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

Teacher_student_love_02இந்த நிலையில் மாணவரது பெற்றோர் மதுரை ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இருவரையும் 3 வாரத்தில் பிடித்து ஓப்படைக்க கோர்ட் கெடு விதித்துள்ளது.

இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அவர்கள் பயன்படுத்திய சிம்கார்டை கண்காணித்த போது அவர்கள் புதுவை மாநிலம் மதகடிபட்டியில் இருப்பது தெரிய வந்தது.

கோதை அங்குள்ள பள்ளியில் ஆசிரியையைகாவும், சிவசுந்தரபாண்டியன் அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் பிடிப்பதற்காக கடையநல்லூர் தனிப்படை போலீசார் புதுவை விரைந்துள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் அவர்கள் பிடிபடுவ்ர்கள் என்று தெரிகிறது.

காதல் ஜோடி தொடர்ந்து 5 சி்ம் கார்டுகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 3 செல்போன்கள் சிம்கள் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் மூலமாக அவர்களை பற்றி துப்பு துலங்கி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version