ஒரு பெரிய பணக்காரன் ஒருவன் ஜென் துறவியை சந்தித்து, “நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை நினைவூட்டும் வகையில் ஏதாவது எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டான்.
அதற்கு அந்த மாஸ்டர் ஒரு காகிதத் துண்டை எடுத்து, அதில் “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்” என்று எழுதிக் கொடுத்தார்.
அதைப் படித்த அவனுக்கு ஒரே கோபம் மூண்டது. “என்ன? நான் உங்களிடம் என்னை ஊக்குவிக்கும் வகையிலும், என் வருங்கால சந்ததியினர் அதைப் படித்து வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கேட்டால், நீங்கள் என் மனம் புண்படும் வகையில் எழுதித் தருகிறீர்களே!” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.
அதற்கு துறவி “ஆமாம். நானும் நீ கேட்டது போல் உன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு மகிழ்ச்சியான ஒன்றைத் தான் எழுதியுள்ளேன்.
எப்படியெனில், ஒரு வேளை உன் மகன் முதலில் இறந்துவிட்டால், அது ஒவ்வொருவரின் மனதிலும் பெரும் வலியை உண்டாக்கும்.
அதுவே உன் பேரன் முதலில் இறந்தால், அது தாங்க முடியாத அனுபவமாக இருக்கும். எப்படியிருந்தாலும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் வரிசையாக இறக்கப் போகிறார்கள்.
அது தான் வாழ்க்கைப் பற்றிய இயற்கையின் உண்மை. ஆகவே நானும் அதை, அந்த காகிதத்தில் எழுதியுள்ளேன். எப்படியிருப்பினும் இந்த உலகில் பிறக்கும் அனைவருக்குமே வலி நிச்சயம் இருக்கும்.
அதையே சந்ததியினரும் பின்பற்றுவர். ஆகவே இந்த காகிதத்தில் இருப்பது எப்போதும் அழியாததாய் இருக்கும்” என்று விளக்கினார்.
Share.
Leave A Reply

Exit mobile version