தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு சரி­யான வழியில் பயணிக்காவிட்டால் எதிர்­கா­லத்தில் தமிழ் மக்­களின் அபி­லாஷை­களை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் மாற்று அர­சியல் கட்சி உரு­வாக முடியும், அர­சி­யலில் எதுவும் நடக்­கலாம் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் தெரி­வித்­துள்ளார்.

நேற்று ஞாயிற்று கிழமை கிளி­நொச்­சியில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

தமிழ் மக்கள் பேரவை ஒரு அர­சியல் கட்­சி­யல்ல. அது ஒரு இயக்கம். இதனை கண்டு எவரும் அச்சம் கொள்­ளவோ, பதற்றம் அடை­யவோ தேவை­யில்லை.

வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், மதத் தலை­வர்கள் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் உள்ளிட்ட பலரை உள்­ள­டக்கி உரு­வாக்­கப்­பட்­டதே தமிழ் மக்கள் பேரவையாகும்.

இது அர­சியல் கட்­சி­யாக செயற்­பட போவ­தில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சரி­யான விழியில் செயற்பாடு­களை முன்­னெ­டுக்­காது விடின் எதிர்­கா­லத்தில் வேறொரு பெயரில் வேறு வடி­வத்தில் மாற்று அர­சியல் கட்சி ஒன்று உரு­வாக முடியும். அர­சி­யலில் எதுவும் நடக்­கலாம். எத­னையும் தற்­போது உறு­தி­யாக கூறி­விட முடி­யாது.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், தமிழ் மக்கள் பேர­வையும் தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைகள் தொடர்பில் இரண்டு தீர்வு திட்­டங்­களை தயா­ரித்து வழங்­கு­கின்ற போது அது தமிழ் மக்­களை பல­வீ­னப்­ப­டுத்­தி­வி­டாதா?

பதில்: தமி­ழத்­தே­சியக் கூட்­ட­மைப்பு இது­வரை எவ்­வித தீர்வுத் திட்­டத்­தையும் தயா­ரித்­த­தாக தெரிய­வில்லை.

தயா­ரிக்­கவும் இல்லை. அப்­படி அவர்கள் தயா­ரித்­தி­ருந்தால் அதனை ஏன் இர­க­சி­ய­மாக வைத்­தி­ருக்க வேண்டும். எந்த மக்­க­ளுக்­காக தீர்­வுத்­திட்­டத்தை தயா­ரித்­தார்­களோ அந்த மக்­க­ளிடம் வெ ளிப்­ப­டுத்த வேண்டும்.

அவ்­வாறு ஏன் இது­வரை மேற்­கொள்ள வில்லை. தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்­வுத்­திட்­டத்தை தயா­ரிக்­கி­றது என்­றதும் இனி அவர்­களும் எத­னையும் உரு­வாக்க முடியும்.ஆனால் இது­வரை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அவ்­வாறு செய்யவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் உள்ள கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு தெரி­யாமல் மாகாண முதலமைச்ச­ருக்கு தெரி­யாமல் மாகாண அமைச்­சர்­க­ளுக்கு தெரி­யாமல் உள்­ளு­ராட்சி சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு தெரி­யாமல் எவ்­வாறு ஒரு தீர்­வுத்­திட்­டத்தை உரு­வாக்க முடியும்?

என­வேதான் தமிழ் மக்கள் பேரவை பாதிக்­கப்­பட்­டுள்ள மக்கள் கௌர­வ­மா­கவும்,ஒரே நாட்­டுக்குள் சுயாட்­சி­யு­டனும் வாழக் கூடிய ஒரு தீர்வுத் திட்­டத்தை உரு­வாக்கும் முயற்­சியில் இறங்கியிருக்கிறது.

சில வேளை இனி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்வுத்திட்டத்தை உருவாக்கி அது தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை விட சிறப்பாக இருந்தால் அதனை அவவர்கள் அரசிடம் சமர்ப்பிக்கட்டும் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version