அமெரிக்காவில் தாயின் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை நம்ப மறுத்த தாயை பாதிக்கப்பட்ட அவரது மகள் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புரூக்ளின் பெருநகரில் குடியிருந்து வரும் 38 வயதான Rosie Sanchez என்பவர் தமது ஆண் நண்பரான Anderson Nunez உடன் வாழ்ந்து வந்தார்.
ரோசியின் மகளான 15 வயது இளம்பெண் Anderson மீது தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரோசி வீட்டில் இல்லாத பல நேரங்களில் Anderson அந்த இளம்பெண் மீது பாலியல் ரீதியாக தொல்லை தந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த அந்த இளம்பெண் தமது தாயிடம் Anderson தம்மை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதை தெரிவித்துள்ளார்.
இதை நம்ப மறுத்த ரோசி, தமது மகளை திட்டியதுடன், Anderson மீது வீண்பழி சுமத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளம்பெண், வாய்ப்பு அமைந்த போது தாய் மற்றும் அவரது நண்பரை கத்தியால் பல முறை தாக்கி கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் நடந்த வீட்டில் இருந்து தப்பிய அவர் தமது உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட பொலிசார் சிதைந்த நிலையில் இரண்டு உடல்களை கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த அந்த இளம்பெண்ணை கைது செய்துள்ள பொலிசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.