தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னால் கடற்புலி போராளியும் புனர்வாழ்வின் பின்னர் தற்போது வடபகுதியில் பிரபலமாக இயங்கிவரும் யாழ். டான் தொலைக்காட்சியின் அரச நிகழ்வுகளுக்கான பிரதம புகைப்பட செய்தியாளருமாகிய நடராஜா குகன் என்பவருக்கு ஜக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என்று கூறிக் கொண்டு மோசடிகள், கட்டை பஞ்சயத்து, தெரு சண்டை, திருட்டுகளில் ஈடுபட்டு வரும் தியாகராஜா துவாரகேஸ்வரனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

z_p01-Tamilகுறித்த ஊடகவியலாளர் யாழில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்தில் முழு நேரமாக பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு சற்று முன்னர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய தியாகராஜா துவாரகேஸ்வரன், ‘உன்னை கழுத்து வெட்டி கொலை செய்வேன்” நான்தான் யாழ்பாணத்தில் தாதா என்னை கேட்டுத்தான் எல்லாம் நடக்குது; உன்னை வீடு தேடி வந்து தூக்கி கொலை செய்வேன்’ என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊடகவியலாளர் தற்பாதுகாப்பு காரணமாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதே நேரம் யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேந்த குடும்பஸ்தரான அ. சிவராசா என்பவரை துவாரகேஸ்வரன் கொலை செய்யப்போவதாக கடந்த 31 திகதி கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

அவருடைய கொலை அச்சுறுத்தலை ஒலிபதிவு செய்த குடும்பஸ்தர் அதனை யாழ் பொலிஸ் நிலையத்தில் பாரபடுத்தியதுடன் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

 

ஒக்ரோபர் 2014 துவாரகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்வதற்கு யாழ். நீதவான் பொ.சிவகுமார் அனுமதியளித்தார். துவாரகேஸ்வரனுக்கு சொந்தமான யாழ்.கொழும்பு சேவையில் ஈடுபடும் பஸ் ஒன்று ஏ – 9 வீதி வழியாக செல்லாமல் நல்லூர் செம்மணி வழியாக சென்றபோது பொலிஸார் மறித்து சோதனையிட்டனர்.

பஸ் வழித்தடம் மாறி வந்த குற்றத்துக்காக பொலிஸார் தண்டச்சீட்டு எழுதியபோது, அங்கு வந்த துவாரகேஸ்வரன் தண்டச்சீட்டை கிழித்து எறிந்ததுடன், பொலிஸாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து, துவாரகேஸ்வரனை கைதுசெய்த பொலிஸார், நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓகஸ்ட் 2015, புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கை திசைதிருப்பும் விதத்தில் நடந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான துவாரகேஸ்வரனை 20 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதித்தது.

சந்தேக நபரான துவாரகேஸ்வரன் தனது சட்டத் தொழில்துறை கடமையில் சட்ட விரோதமாக தலையீடு செய்வதுடன், தனது தொழிலுக்கு இடைஞ்சல் செய்யும் நோக்கத்துடன் தரக்குறைவானதும் உண்மைக்குப் புறம்பானதுமான கூற்றுகளை இணைய வலைத் தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் பரப்பி வருவதாகவும்.

அச்செயல்பாட்டினால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணி கே.வி தவராசா கொண்டு வந்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சந்தேக நபருக்கு எதிராக இருபதுக்கு மேற்பட்ட முறைப்பாடுகளும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும் சந்தேகநபர் ஏற்கனவே குற்றவியல் வழக்கொன்றில் குற்றவாளியாக காணப்பட்டு ஒருவருட சிறைத் தண்டணை விதிக்கப்பட்டவர் என்பதுடன் இந்த சந்தேக நபருக்கு குற்றச் செயல்கள் என்பது சர்வ சாதாரணமான விடயமாகும்.

எனவே சந்தேக நபரை பிணையில் விடுவதாயின் கடும் நிபந்தணைகளை விதிக்கப்பட வேணடும் என சட்டத்தரணிகள தமது வாதத்தை முன்வைத்ததையடுத்து, இதையடுத்து நீதிவான் நிசாந்த பீரிஸ் 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் குறித்த சந்தேகநபர் செல்ல அனுமதித்ததுடன் வழக்கை ஒத்திவைத்தார்.

துவாரகேஸ்வரன்

துவாரகேஸ்வரன் யாழ்மாவட்ட அமைப்பாளர் இல்லை – UNP

தியாகராஜா துவாரகேஸ்வரன் யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நடைபெறும் பத்திரிகையாளர் மாநாடுகளில் தானே யாழ் மாவட்ட இணைப்பாளர் என்று கூறிக்கொண்டு பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்தி வருகிறார்.

இது தொடர்பகை UNPயின் 78 பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் UNPயிடமும் கேட்டபோது, UNP கட்சியின்  முக்கியஸ்தர் தேவ மனோகரன் சுவாமிநாதன்  ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும்போது, தானோ தனது கட்சியான UNP கட்சியோ தியாகராஜா துவாரகேஸ்வரனை UNP கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளராக நியமிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக தியாகராஜா துவாரகேஸ்வரன் யாழ் மாவட்டத்தின் UNP இணைப்பாளரோ அல்லது அமைப்பாளரோ அல்லது முழு நேர செயற்பாட்டாளரோ இல்லை என்பதனை UNP உறுதிபடுத்தி உள்ளது.

தியாகராஜா துவாரகேஸ்வரனுக்கு எதிராக இருபதுக்கு மேற்பட்ட முறைப்பாடுகளும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

மேலும் சந்தேகநபர் ஏற்கனவே குற்றவியல் வழக்கொன்றில் குற்றவாளியாக காணப்பட்டு ஒருவருட சிறைத் தண்டணை விதிக்கப்பட்டவர் என்பதுடன் இந்த சந்தேக நபருக்கு குற்றச் செயல்கள் என்பது சர்வ சாதாரணமான விடயமாகும்.

UNP  பேரைச் சொல்லி துவாரகேஸ்வரன் யாழ் குடாநாட்டில் செய்துவரும் சட்டத்திற்கு முரணான செயல்களுக்கு யாழ் பொலிஸ் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசின் யாழ்மாவட்ட இணைப்பாளராக போலியாக தெரிவித்து மக்களையும் ஊடகத்துறையினையும் தவறாக வழிநடத்தி மோசடி தேவைகளுக்கும் அரசையும் UNP  கட்சிப் பெயரையும் தவறாக பயன்படுத்திவரும் துவாரகேஸ்வரன் கைது செய்யபட்டு சட்டதின்முன் நிறுத்தவேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளர்.

யாழ்ப்பாண ஊடக மையம் தியாகராஜா துவாரகேஸ்வரன் என்ற கிறிமினல் குற்றவாளியை ஜக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் என்று செய்தி போடுவதும் அத்தகைய இல்லாத ஒரு பதவிக்காரனை வைத்து போலி பத்திரிகையாளர் மாநாடு வைப்பதுவும் சட்டபடி தண்டனைக்குரிய குற்றமாகும்.

அவரை இணைப்பாளர் என்று செய்தி போட்ட அனைத்து ஊடகங்களின் மீதும் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

Share.
Leave A Reply

Exit mobile version