இணையத்தை பயன்படுத்துபவர்கள் அனைவரும் கூகுள் தளத்தை தான் அதிகம் பயன்படுத்துவார்கள்.

கூகுள் தளத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

கூகுள் 1996ம் வருடம் ஜனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின் (Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப்படிப்பிற்காக (Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணிதத்தொடர்பு) முடிவில் தோன்றியதாகும்.

இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக கூகோள்.கொம் (googol.com) என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர்.

அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த பெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை.

எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே “கூகுள்” என்ற புதிய சொல்.

கூகுள் தளம் அதன் பெயரை ஒரு அர்த்தமுள்ள பெயராக வைத்துள்ளது. google என்னும் இந்த சொல் GOOGOL என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது.

கணித முறையின் படி கூகுள் என்பதன் அர்த்தம் ஒன்று என்ற எண்ணுக்கு பின்னால் நூறு பூஜ்ஜியத்தை கொண்டதாகும்.

அமெரிக்க கணிதவியலாளர் Edward Kasner என்பவர் தனது புத்தகத்தில் “Mathematics and the Imagination”ல் குறிப்பிட்டுள்ளார். Kasner and James Newman இருவர் எழுதின புத்தகம் தான் அது.

அதாவது நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு எண் தான் ஒன்றுக்கு பின்னால் நூறு பூஜ்ஜியம் வருவது.

இதேபோல் நாம் கற்பனை செய்ய முடியாத தகவல்களை தான் கூகுள் கொண்டுள்ளது.

Goooooooooo,oooooooooo,oooooooooo,oooooooooo,oooooooooo,oooooooooo, oooooooooo,oooooooooo,oooooooooo,ooooooooooGle …..

10000000000,0000000000,0000000000,0000000000, 0000000000,0000000000,0000000000,0000000000,0000000000,0000000000.

ஆம். 100 ZEROS இனி கூகுளை நூறு நூறு என்று அழைக்கலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version