இண்­டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்றும் வீரர்­களில் இந்­திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்­லியே அதி­கூ­டிய சம்­ப­ளத்தைப் பெற­வுள்ளார்.

இண்­டியன் ப்றீமியர் லீக்­கினால் அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட வீரர்­க­ளுக்­கான சம்­பளப் பட்­டி­யலில் விராத் கோஹ்­லியின் சம்­பளம் இந்­திய நாண­யப்­படி 15 கோடி இந்­திய ரூபா (32 கோடி இலங்கை ரூபா) ஆகும்.

14047malingaஇப் போட்­டி­களில் நீண்­ட­கா­ல­மாக மிகவும் பெறு­மதி வாய்ந்த வீர­ராக கரு­தப்­பட்ட எம். எஸ். தோனியின் சம்­பளம் 12 கோடியே 50 இலட்சம் இந்­திய  ரூபா (27 கோடி இலங்கை ரூபா) ஆகும்.

இலங்கை வீரர் லசித் மாலிங்­கவின் சம்­பளம் 8 கோடியே 10 இலட்சம் இந்­திய  ரூபா (17 கோடி இலங்கை ரூபா) ஆகும்.

இண்­டியன் ப்றீமியர் லீக்­கினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள வீரர்­களின் சம்­பளம் இந்­திய ரூபாய்­களில் வரு­மாறு (தொகை இந்­திய ரூபாவில்)

விராத் கோஹ்லி (றோயல் செலஞ்சர்ஸ்) 15 கோடி.

எம். எஸ். தோனி (பூனே) 12 கோடியே 50 இலட்சம்

ஷிக்கர் தவான் (சன்ரைஸ்) 12 கோடியே 50 இலட்சம்

ரோஹித் ஷர்மா (மும்பை) 11 கோடியே 50 இலட்சம்

கெளதம் கம்பீர் (கொல்­கத்தா) 10 கோடி

கீரொன் பொலார்ட் (மும்பை) 9 கோடியே 70 இலட்சம்

ஏ. பி. டி வில்­லியர்ஸ் (றோயல் செலஞ்சர்ஸ்) 9 கோடியே 50 இலட்சம்

சுரேஷ் ரெய்னா (ராஜ்கொட்) 9 கோடியே 50 இலட்சம்

கிறிஸ் கேல் (றோயல் செலஞ்சர்ஸ்) 8 கோடியே 40 இலட்சம்

லசித் மாலிங்க (மும்பை) 8 கோடியே 10 இலட்சம்

ஹர்­பஜன் சிங் (மும்பை) 8 கோடி.

அஜின்­கியா ரஹானே 8 கோடி
(1 இந்திய ரூபாவின் பெறுமதி சுமார் 2.17 இலங்கை ரூபா ஆகும்.)

Share.
Leave A Reply

Exit mobile version