வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சியினால் கொண்டு வர முயற்சிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பல தரப்பினராலும் பல கருத்துக்களும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.
அதனடிப்படையில், தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சியின் உறுப்பினர்கள் இதற்கு முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
வடமாகாண சபை தேர்தலின் போது, சீ.வி.விக்னேஸ்வரனை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி கொண்டு வந்தார்.
அப்படியான ஒருவருக்கு எதிராக ஏனைய கட்சிகளின் அனுமதியின்றி நம்பிக்கை இல்லா பிரேரனை கொண்டு வருவதென்பது கண்டிக்கதக்க ஒரு விடயம்.
மக்கள் மத்தியில் இருந்து ஒரு தீர்வு திட்டத்தினை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவா, இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையினை கொண்டு வர இருக்கின்றார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின், மேல் மட்டத்தவர்களின் அனுமதியுடன் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையினை கொண்டு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி மட்டத்தில் பேசாமல் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வருவதென்பது முறையற்றது என அவர் மேலும் கூறினார்.
இலக்கியாவின் பார்வையில்..
60 வருட நீண்ட கால போராட்டத்துக்கு பின்பு, இவ்வருடம் தமிழர்களுக்கு நல்லதோர் தீர்வு ஒன்று கிடைக்கவிருக்கின்ற இச் சந்தர்பத்தில், இதுவரை காலமும் ஒரு தீர்வு திட்டத்தை தயாரிக்காமல் இருந்தவர்கள், இப்பொழுதுதான் மக்கள் மத்தியிலிருந்து ஓரு தீர்வு திட்டத்தை தயாரிக்க போகிறார்களாம் என்பது தமிழ் மக்களையும், புதிய அரசாங்கத்தையும் குழப்புகின்ற ஒரு நடவடிக்கையானதாகும்.
இவர்கள் தாயரிக்கும் தீர்வு திட்டத்தை எப்படியானது? அதை எப்படி நடைமுறைப்படுத்துவார்கள் என்பதை முதலில் மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும்.
தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களுக்கு பதவிகள் கிடைக்கவில்லை என்பதால் உருவாக்கப்பட்டதே “தமிழ் மக்கள் பேரவையாகும்” என்பது மக்கள் அறிவார்கள்.
நல்லது நடக்கப்போகிறது என தமிழர்கள் நம்பிக்கொண்டிருக்கையில், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற குழப்பவாதிகள் எல்லாவற்றையும் குழபியடித்து அதில் குளிர்காயலாம் என நினைப்பது ஒட்டு தமிழர்களுக்கும் செய்யும் துரோகத்தனமாகும்.
இவ்வாறான குழப்பவாதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து முதலில் நம்பிக்கை இல்லா பிரேரணை மூலம் நீக்கினால் தமிழர்களுக்கு நல்லது நடக்கும்.