ஹினிதும வீரபான பிரதேசத்தில் மயானத்தில் விட்டு செல்லப்பட்டிருந்த 2 வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குழந்தையை , அதன் தந்தையே கொலை செய்து மயானத்தில் போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தந்தையின் இரண்டாவது மனைவியின் பிள்ளையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையின் தாயுடன் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்தே தந்தை, குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

குழந்தையில் பாட்டி சில நாட்களுக்கு பின்னர் உயிரிழந்ததாகவும் , பாட்டியின் சடலம் புதைக்கப்பட்டிருந்த மயானத்திலேயே குழந்தையின் சடலத்தையும் போட்டுச் சென்றுள்ளார் குறித்த தந்தை.

Share.
Leave A Reply

Exit mobile version