ஈரானானது தனது ஏவுகணைகளுக்கான நிலத்துக்கு கீழான புதிய களஞ்சியசாலை கள் குறித்து அறிவித்துள்ளது.
மேற்படி நிலத்துக்கு கீழான களஞ்சியசாலையில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய வல்லமையைக் கொண்ட ஏவுகணைகள் உள்ளடங்கலான ஏவுகணைகள் களஞ்சியப்படுத்தப்படவுள்ளதாக தெரி விக்கப்படுகிறது.
மேற்படி புதிய களஞ்சியசாலை தொடர் பில் அந்நாட்டு தொலைக்காட்சி செய்திகளை வெளியிட்டுள்ளது.
மேற்படி களஞ்சியசாலையானது மலைகளுக்கு கீழாக அமைந்துள்ளது.
ஈரானிய புரட்சிகர காவல்படையால் செயற்படுத்தப்படும் இந்த களஞ்சியசாலையை அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் அலி லாரிஜானி ஆரம்பித்து வைத் துள்ளார்.
ஈரானின் இந்த களஞ்சியசாலை தொடர் பான தொலைக்காட்சி ஒளிபரப்புக் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கையில், இது 2010 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை மீறுவதாக உள்ளதென தெரி வித்துள்ளது.