மெக்சிகோவில் குழந்தையொன்றை எலிகள் கடித்து உண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவது
மெக்சிகோ நகரை சேர்ந்த லிஸ்பெத் ஜெரோனிமா என்ற வயது 18 வயது பெண் அகோல்மேன் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.
வீட்டில் தனது 4 மாத பெண் குழந்தையை கட்டிலில் தூங்க வைத்து விட்டு வீட்டை பூட்டி விட்டு அவர் நடன விருந்தொன்றில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. இது குறித்து பக்கத்து வீட்டு பெண்மணி தாய்க்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
லிஸ்பெத் வேகமாக ஓடி வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார் தனது குழந்தையை சுற்றி எலிகள் மொய்த்து கொண்டு இருந்தது.
உடனடியாக குழந்தையை தூக்கியுள்ளார். குழந்தையின் முகம்,கால் விரல்கள் முழுவதும் ரத்தமாக இருந்துள்ளது. எலிகள் குழந்தையின் சதைகளை சாப்பிட்டு உள்ளதை அவர் கண்டுள்ளார்.
உடனடியாக மருத்தவர் வரவழைக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டது அதனால் குழந்தை பிழைத்து கொண்டுள்ளது.
இது தொடர்பாக கவன குறைவாக இருந்தத்தாக பொலிஸாரால் குழந்தையின் தாயார் கைது செய்யபட்டுள்ளார்