மும்பை: பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான அனுஷ்கா சர்மா மற்றும் பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகம் ஆகியோரின் ஆதரவால் “6 பேக் பேண்ட்” எனும் இந்தியாவின் முதல் திருநங்கைகள் மியூசிக் பேண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் இளைஞர்கள் அமைப்பான ஒய்-பிலிம்ஸ் இந்த இசை வீடியோவை தயாரித்துள்ளது. மும்பையில் நடந்த இதன் வெளியீட்டு விழாவில் பேசிய அனுஷ்கா சர்மா உலகில் உயிர் வாழும் அனைவரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டுமென்று தான் விரும்புவதாகவும், வார்த்தைகள் தோற்கலாம் ஆனால் இசை தோற்காது என்பதால்தான் இந்த புதிய முயற்சி என்றும் கூறினார்.

ஹிஜ்ரா என்ற சமூகத்தைச் சேர்ந்த 6 திருநங்கை பாடகர்களுடன் இணைந்து சோனு நிகமும் இந்த ஆல்பத்தில் பாடியுள்ளார்.

மொத்தம் ஆறு பாடல்கள் உள்ள இந்த ஆல்பத்திற்காக திருநங்கைகளுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவம் என்றும் அவர்களது வெகுளித்தனத்தையும் குழந்தை உள்ளத்தையும் தான் ரசித்ததாகவும் சோனு நிகம் தெரிவித்துள்ளார்.

ஹம் ஹைன் ஹேப்பி என்ற அந்த ஸ்மைலி வீடியோ இதோ:

Share.
Leave A Reply

Exit mobile version