அர்ஜென்டீனா நாட்டில் சொந்த மகளையே தந்தை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜென்டீனாவில் லொரெட் நகரில் 56 வயதான நபர் ஒருவர் தமது மகளை 22 வருடங்களாக தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்துள்ளார்.

தமது மனைவி பிரிந்து சென்றதில் இருந்தே 9 வயதான மகளை துன்புறுத்த துவங்கிய அவர் செக்ஸ் அடிமை போலவே அவரை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 22 வருடங்களில் அவர் 8 குழந்தைகளுக்கும் தமது தந்தையால் தாயாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் ஒரு மாதகால தீவிர தேடுதலுக்கு பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே தம்மை 22 ஆண்டுகளாக கொடுமைப்படுத்திய தந்தைக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள Antonia தமக்கு நீதி கிட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று தந்தையின் உறவினர்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள அவர்,

தமது வாழ்க்கையை நாசப்படுத்திய அவரை சிறைக்கு அனுப்புவதே தமது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version