ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக அமெரிக்க கடற்படை வீரர்கள் மன்னிப்பு கோரிய வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
ஈரானுக்குச் சொந்தமான பார்சி தீவை ஒட்டிய கடல் எல்லைக்குள் இரு அமெரிக்க போர்ப் படகுகள் அத்துமீறி நுழைந்ததால், அந்தப் படகுகளில் இருந்த 10 கடற்படை வீரர்களை ஈரான் ராணுவத்தினர் கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட 10 வீரர்கள் தரையில் அமர்ந்திருக்கும் படத்தையும், வீரர்கள் கப்பலில் மன்னிப்பு கேட்டு சரணடைந்த, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவையும் ஈரான் ஊடகங்கள் நேற்று வெளியிட்டன.
இதனையடுத்து, அமெரிக்க கடற்படை வீரர்கள் வேண்டுமென்றே எல்லைப்பகுதிக்குள் நுழையவில்லை என்று விசாரணையில் தெரியவந்ததால், அவர்களை விடுவித்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீரர்கள் விடுவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்த வெளியுறவு துறை செயலர் ஜான் கெர்ரி, நாங்கள் செய்தது தவறுதான் என்று கூறி ஈரானிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.