தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திடீர் மரணத்தைத் தழுவிய தனது காதலரை அவரது மரணச்சடங்கின் போது திருமணம் செய்துள்ளார்.

சசோயங்சவோ மாகாணத்தைச் சேர்ந்த நான் திபாரத் என்ற பெண்ணே இவ்வாறு தனது காதலரான பியத்தை அவரது மரணச்சடங்கின் போது திருமணம் செய்துள்ளார்.

திபாரத்தும், பியத்தும் திருமணம் செய்வதற்கு ஏற்பாடாகியிருந்தநிலையில் பியத் திடீரெனமாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தனது மனம் கவர்ந்த காதலரை திருமணம் செய்யவேண்டும் என்ற தனது கனவை நனவாக்க முடிவெடுத்த திபாரத், அவரை மரணச் சடங்கின் போது திருமணம் செய்துள்ளார்.

இதன்போது பியத்தின் சடலத்திற்கு மணமகனுக்குரிய ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது அதேசமயம் திபாரத்தும் முழுமையான திருமண ஆடை அணிந்து இந்த வைபவத்தில் பங்கேற்றார்.

இச்சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

3012957C00000578-0-image-a-42_1452588926580

Share.
Leave A Reply

Exit mobile version