பெற்றெடுத்த குழந்தையை கொலை செய்த சந்தேக நபராக கைது செய்யப்பட்ட குழந்தையின் தந்தை அருள்தாஸ் ஸ்டென்லி என்பவரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது ஹட்டன் நீதவான் பிரசாத் லியனகே இவ்வாறு உத்திரவிட்டுள்ளார்.

குழந்தையின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் மரண பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தையின் தாய் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சந்தேக நபரான குழந்தையின் தந்தை, மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 9 மாதங்களே ஆன குழந்தையின் நிலத்தில் அடித்து கொலை செய்துள்ளார்.

அத்துடன் மனைவியையும் பாரிய கல் ஒன்றினால் அவர் தாக்கியுள்ளார்.

குழந்தையின் தாய் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

குறித்த தாய் சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின் சிசுவின் மரண விசாரணைகள் இடம்பெறும் என தெரியவந்துள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version