பெய்ஜிங்: சீனாவில் மலைப்பாம்பின் தலையில் முத்தமிட முயன்ற பெண்ணை அந்த பாம்பு திடீரென்று பாய்ந்து மூக்கில் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக அப்பெண்மணி உயிர் தப்பினார். சீனாவின் பூகெட் மாகாணத்தில் அமைந்துள்ள ஜூ(மிருகக் காட்சி சாலை) ஒன்றில் சுற்றுலாப் பயணிகளை கவர கடந்த சனிக்கிழமை ஒரு நிறுவனம் ஒன்று மலைப்பாம்பை வைத்து நிகழ்ச்சி நடத்தியது.
அப்போது அங்கு வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவரான ஜின் ஜிங் என்ற பெண் 2 நபர்கள் பிடித்து வைத்திருந்த மலைப்பாம்பின் தலையில் முத்த மிட முயன்றார்.
அப்போது, அந்த மலைப் பாம்பு திடீர் என அவரது மூக்கை கவ்வி பிடித்து கொண்டது. உடனடியாக அப்பெண் அலறத் தொடங்கினார்.
அங்கு அவருக்கு 8 தையல்கள் போடப்பட்டது. இது குறித்த வீடியோ யூடியுபில் வெளியானதும் காவல்துறையினர் அங்கு சென்று பாம்பு நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு நிகழ்ச்சியை நடத்த தடை விதித்துள்ளனர்.