இலண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்குச் செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இலண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றார்கள்.

செயற்கைக்கோளை விண்வெளிக்கு ஏவு வது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது எனப் பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

இவர்களில் அதீத திறமைமிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது.

அதில் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் ஓர் ஈழத் தமிழ் மாணவி. அவர் பெயர் சியோபன் ஞானகுலேந்திரன்.

இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமை பெற்றிருக்கிறார். அத்தோடு விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.

1504953_276135165873886_1171200655_nசர்வதேச விண்வெளி ஓடத்தில் சென்று இவரும் இவரோடு இங்கிலாந்து மாணவி டியானாவும் சேர்ந்து சில நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபடவுள்ளனர்.

படத்தில் இருப்பவர் டியானா மற்றும் சியோபன். முதல் முறையாக தமிழர் ஒருவர் விண்வெளிக்குச் செல்ல உள்ளது உலகத் தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித்தந்துள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version