சென்னை: காதல் என்பது இளம் வயதில் ஏற்படும் மாயை என்று தெரிவித்துள்ளார் நடிகை அனுஷ்கா. தெலுங்கு, தமிழ் படங்களில் மிகவும் பிசியாக இருப்பவர் நடிகை அனுஷ்கா.

கடந்த ஆண்டு அவர் நடிப்பில் என்னை அறிந்தால், பாகுபலி, ருத்ரமா தேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் ரிலீஸாகின.

தற்போது அவர் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவின் எஸ்-3 படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் அனுஷ்கா காதல், திருமணம் பற்றி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

19-1453189342-anushka-visit-kollur-mookambika-amman-temple35-600காதல்
காதல் என்பது இளம் வயதில் அதாவது தெளிவு இல்லாத வயதில் ஏற்படும் ஒரு வகை மாயை, அவ்வளவு தான். இளம் வயதில் உள்ள அனைவரையும் அந்த மாயை பிடிக்கிறது.

நேரம் இல்லை
வளர்ந்த பிறகு காதல் என்ற பெயரில் செய்ததை எல்லாம் நினைத்தால் சிரிப்பு தான் வரும். நான் யாரையும் இதுவரை காதலித்தது இல்லை. காதலிக்க எனக்கு நேரமும் இல்லை. சினிமாவை தான் தற்போது காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
திருமணம்
சரியான நேரம் வருகையில் நிச்சயம் என் திருமணம் நடக்கும். எனக்கு வரும் கணவர் ஒளிவு மறைவு இன்றி நடக்க வேண்டும், எனக்கு பிடிப்பது எல்லாம் அவருக்கும் பிடிக்க வேண்டும். அத்தகையவரை சந்திக்கையில் திருமணம் செய்து கொள்வேன்.
படங்கள்
கடந்த ஆண்டு என் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் நன்றாக ஓடின. அதனால் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்த ஆண்டு நல்ல கதை கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
Share.
Leave A Reply

Exit mobile version